ஆயுஷ்

‘எனது வாழ்க்கை - எனது யோகா’ காணொளி வலைப்பதிவு போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களை ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது.

Posted On: 14 JUL 2020 6:57PM by PIB Chennai

எனது வாழ்க்கை - எனது யோகா’ காணொளி வலைப்பதிவு போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டது. டிஜிட்டல் மேடையில் இந்த உலகளாவிய போட்டி ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் (ICCR) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக, 6 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடியால் மே 31, 2020 அன்று தொடங்கப்பட்டது.

 

இந்தப் போட்டி தொழில்முறை, வயது வந்தோர் (18 வயதுக்கு மேற்பட்டவர்கள்) மற்றும் இளைஞர்கள் (18 வயதிற்குட்பட்டவர்கள்) ஆண், பெண் போட்டியாளர்களுக்கு தனித்தனியாக என ஆறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்தியாவில் இருந்து மொத்தம் 35141 உள்ளீடுகள் பெறப்பட்டன, கிட்டத்தட்ட 2000 உள்ளீடுகள் பிற நாடுகளிலிருந்து பெறப்பட்டன. பிற நாடுகளின் உள்ளீடுகள் அந்தந்த இந்தியத் தூதரகங்களால் மதிப்பீடு செய்யப்பட்டன.

 

தொழில்முறைப் பிரிவில் முதல் வெற்றியாளர்கள் அஸ்வத் ஹெக்டே (ஆண்) மற்றும் ரஜ்னி கெஹ்லோட் (பெண்). வயது வந்தோர் (18 வயதுக்கு மேற்பட்டவர்கள்) பிரிவில் ராஜ்பால்சிங் ஆர்யா மற்றும் ஷெய்லி பிரசாத் முதலிடமும், இளைஞர்கள் (18 வயதுக்குட்பட்டவர்கள்) பிரிவில் பிரணய் சர்மா மற்றும் எஸ். ஹெச்.நவ்யா.ஆகியோரும் முதலிடம் பெற்றனர்.

 

இந்தியாவில் இருந்து பெறப்பட்ட உள்ளீடுகள் 200 யோகா நிபுணர்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றில் இருந்து, 160 வீடியோக்கள் பட்டியலிடப்பட்டன. மேலும், இந்தப் பட்டியிலிடப்பட்ட உள்ளீடுகளை, ஒவ்வொரு வகைப் பிரிவுக்காகவும் 15 பேர் கொண்ட நடுவர் குழு மதிப்பீடு செய்தது. ஜூரி உறுப்பினர்களால் சுயாதீனமாக ஒதுக்கப்பட்ட சராசரி மதிப்பெண்களின் அடிப்படையில் வெற்றியாளர்கள் முடிவு செய்யப்பட்டனர். அதிக சராசரி மதிப்பெண் பெற்றவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

 

இந்தப் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. போட்டியில் பங்கேற்பவர்கள் 3 யோகாசனங்களின் 3 நிமிட வீடியோவை (கிரியா, ஆசனம், பிராணயாமா, பந்தா அல்லது முத்ரா) பதிவேற்ற வேண்டும், அத்துடன் யோகா நடைமுறைகள் தங்கள் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின என்பது பற்றிய ஒரு குறும்படச் செய்தி / விளக்கமும் இணைக்கப்பட வேண்டும். #MyLifeMyYoga என்ற ஹேஷ்டேக் மூலம் வீடியோக்கள் பேஸ்புக், ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டன. இந்த போட்டி சர்வதேச யோகா தினத்தில், அதாவது ஜூன் 21, 2020 அன்று 23.50 மணிக்கு நிறைவடைந்தது.

 

ஆறு பிரிவுகளில் இந்திய நாட்டில் பரிசு வென்றவர்கள் பின்வருமாறு:

 

  1. தொழில்முறை வகை:

 

ஆண்

 

வ.எண்

பெயர்

பங்கேற்றோர் ID

இடம்

வெற்றி பெற்றவர்

1

அஸ்வத் ஹெக்டே

NOPaRGKqa

சிரிசி – கர்நாடகா - இந்தியா

முதல் பரிசு

2

HA பட்டேல்

IndiaIG2424

விவரங்கள் - எதிர்ப்பார்க்கப்படுகின்றன

இரண்டாம் பரிசு

3

ரிஷிபால்

UvosV94Hp

ஹரித்துவார் – உத்திரகாண்ட்.- இந்தியா

மூன்றாம் பரிசு

 

பெண்

 

வ.எண்

பெயர்

பங்கேற்றோர் ID

இடம்

வெற்றி பெற்றவர்

1

ரஜ்னி கெஹ்லோட்

5657773

விவரங்கள் - எதிர்ப்பார்க்கப்படுகின்றன

முதல் பரிசு

2

பூஜா பட்டேல்

IndiaIG1089

விவரங்கள் - எதிர்ப்பார்க்கப்படுகின்றன

இரண்டாம் பரிசு

3

ஜான்வி பிரதீபா பட்டேல்

India-T457

விவரங்கள் - எதிர்ப்பார்க்கப்படுகின்றன

மூன்றாம் பரிசு

 

 

  • II. வயது வந்தோர் வகை (18 வயதிற்கு மேற்பட்டவர்கள்) :

 

ஆண்

 

வ.எண்

பெயர்

பங்கேற்றோர் ID

இடம்

வெற்றி பெற்றவர்

1

ராஜ்பால் சிங் ஆர்யா

GHFK3Seok

ஷாம்லி – உத்திரப்பிரதேசம் - இந்தியா

முதல் பரிசு

2

ஹரிஷித் பனிகர்

Ny1gvx0pA

சண்டிகர் – சண்டிகர் - இந்தியா

இரண்டாம் பரிசு

3

நிதின் தனாஜி பாவலே

Txb_H8_bu

பூனே – மகாராஷ்ட்ரா - இந்தியா

மூன்றாம் பரிசு

 

பெண்

 

வ.எண்

பெயர்

பங்கேற்றோர் ID

இடம்

வெற்றி பெற்றவர்

1

ஷைலி பிரசாத்

fUkqrq9Of

பெங்களூரு, கர்நாடகா

முதல் பரிசு

2

அகன்ஷா

IndiaIG1635

விவரங்கள் - எதிர்ப்பார்க்கப்படுகின்றன

இரண்டாம் பரிசு

3

U.B. அதிஸ்ட்டா

SckM9x1C4

நாகர்கோவில் – தமிழ்நாடு - இந்தியா

மூன்றாம் பரிசு

 

  1. இளைஞர் வகை (18 வயதிற்கு கீழுள்ளோர்):

 

ஆண்

 

வ.எண்

பெயர்

பங்கேற்றோர் ID

இடம்

வெற்றி பெற்றவர்

1

ப்ரணய் ஷர்மா

Y4qsge-4i

ஷரன்பூர் – உத்திர பிரதேசம் - இந்தியா

முதல் பரிசு

2

ஷன்னி

vqgQGmrK6

விவரங்கள் - எதிர்ப்பார்க்கப்படுகின்றன

இரண்டாம் பரிசு

3

கபிலன் சுப்ரமணியம்

3FPdAMyqt

கரூர் – தமிழ்நாடு - இந்தியா

மூன்றாம் பரிசு

 

பெண்

 

வ.எண்

பெயர்

பங்கேற்றோர் ID

இடம்

1

எஸ்.ஹெச். நவ்யா

சுங்கன்கடை அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம்

முதல் பரிசு

2

அவ்னி ராம்ரக்‌ஷனி

பூனே - மகாராஷ்ட்ரா

இரண்டாம் பரிசு

3

மான்வி வியாஸ்

ஹிஸ்ஸார் - ஹரியானா

மூன்றாம் பரிசு

 

வெளிநாட்டு பங்கேற்பாளர்களிடையே வெற்றியாளர்களின் பெயர்கள் பின்னர் தனித்தனியாக அறிவிக்கப்படும்.

 

***



(Release ID: 1638637) Visitor Counter : 195