மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டிஜிட்டல் கல்வி குறித்த PRAGYATA வழிகாட்டுதல்களை காணொளிக் காட்சி மூலம் வெளியிட்டார்.
Posted On:
14 JUL 2020 4:50PM by PIB Chennai
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' டிஜிட்டல் கல்வி குறித்த ”பிரக்யாட்டா” வழிகாட்டுதல்களை புதுடில்லியில் காணொளிக் காட்சி மூலம் இன்று வெளியிட்டார். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சஞ்சய் தோத்ரே அவர்களும் இணையம் வாயிலாகk கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு. ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’, கோவிட்-19 தொற்றுநோய் பள்ளிகளை மூடுவதற்கு வழி வகுத்ததுடன், பள்ளிகளில் பயிலும் நாட்டின் 240 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளைப் பாதித்துள்ளது. இந்தப் பள்ளி மூடல்கள் நீட்டித்திருப்பது கற்றல் இழப்பை ஏற்படுத்தக்கூடும். தொற்றுநோயின் தாக்கத்தைத் தணிக்க, பள்ளிகள் கற்பித்தல் மற்றும் கற்றலில் இதுவரை கடைபிடித்த வழிமுறையை மறு வடிவமைப்பது மட்டுமல்லாமல், பள்ளியில் வழங்கப்படும் கல்வி போல, வீட்டிலேயே தரமான கல்வியை வழங்குவதற்கான பொருத்தமான முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.என்று திரு. போக்ரியால் கூறினார்.
ஊரடங்கு காரணமாக தற்போது வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு இணையம் / கலப்பு / டிஜிட்டல் கல்வியை மையமாகக் கொண்டு, கற்றவர்களின் பார்வையில் இருந்து ”பிரக்யாட்டா” வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார். டிஜிட்டல் / இணைய கல்வி குறித்த இந்த வழிகாட்டுதல்கள் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும், இணையக் கல்வியை முன்னெடுத்துச் செல்வதற்காகவுமான ஒரு வரைபடம் அல்லது குறிப்புகளை வழங்குகிறது என்றும் அவர் கூறினார். பள்ளித் தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியக் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட பயனாளிகளுக்கு இந்த வழிகாட்டுதல்கள் பொருத்தமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று அமைச்சர் எடுத்துரைத்தார். இந்த வழிகாட்டுதல்கள் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் மாற்றுக் கல்வி ஆண்டு திட்டத்தை, டிஜிட்டல் சாதனங்களுக்கான அணுகலைக் கொண்ட கற்றவர்கள் மற்றும் குறைந்த அல்லது அணுகல் இல்லாத கற்பவர்கள். இரு தரப்பினரும் பயன்படுத்துவதை வலியுறுத்துகின்றன.
PRAGYATA வழிகாட்டுதல்களில் இணையம் / டிஜிட்டல் வழி கற்றலில் எட்டு படிகள் உள்ளன, அதாவது திட்டம்- விமர்சனம்- ஏற்பாடு- வழிகாட்டி- யாக் (பேச்சு) - பாடப்பணி- கண்காணித்தல்- பாராட்டு. இந்தப் படிகள் டிஜிட்டல் கல்வியின் திட்டமிடலுக்கும், செயல்படுத்தலுக்கும் படிப்படியாக எடுத்துக்காட்டுகளுடன் வழிகாட்டுகின்றன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு. தோத்ரே, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி நலனை உறுதி செய்வதற்காக மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் ”பிரக்யாட்டா” வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றார். மேலும், தொற்று நோய்களின் போது இணைய வழிக் கல்வி நிறைய இடைவெளிகளை நிரப்பியுள்ளது, ஆனால் மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் போது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றார். இந்த வழிகாட்டுதல்கள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், தலைவர்கள் மற்றும் பிற பயனாளிகளுக்கு இணையப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கற்றுக்கொள்ள உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இணைய வழிக் கற்றல் சூழலை வழங்கும் ”பிரக்யாட்டா” வழிகாட்டுதல்களை வெளிக்கொணர அமைச்சகம் மேற்கொண்ட முயற்சிகளையும் திரு. தோத்ரே பாராட்டினார்.
இந்த வழிகாட்டுதல்களில், நிர்வாகிகள், பள்ளித் தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான பரிந்துரைகள் பின்வரும் பகுதிகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
- மதிப்பீடு தேவை
- இணைய வழிக் கல்வியைத் திட்டமிடும் போது கல்வி ஆண்டுக்கு தகுந்தாற்போல கால அளவு, திரையிடல் நேரம், உள்ளடக்கம், சீரான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் செயல்பாடுகள் போன்றவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
- கல்வி ஆண்டிற்கு தகுந்தாற்போல பாடங்களின் அளவுகளைக் கற்பிக்கும் முறை
- இணைய வழிக் கல்வியின் போது உடல், மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு
- இணையப் பாதுகாப்பு மற்றும் இணையப் பாதுகாப்பை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட நடைமுறை நெறிமுறைகள்.
- பல்வேறு முயற்சிகளுடன் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு.
பரிந்துரைக்கப்பட்ட திரையிடல் நேரம்
வகுப்பு
|
பரிந்துரைக்கப்பட்டுள்ள நேரம்
|
ஒன்றாம் வகுப்புக்கு முன்பு
|
ஒரு குறிப்பிட்ட நாளில் பெற்றோருடன் உரையாடுவதற்கும், அவர்களுக்கு வழிகாட்டுவதற்கும் 30 நிமிடங்களுக்கு மேல் அல்ல.
|
வகுப்பு - 1 முதல் 12 வரை
|
NCERTஇன் மாற்றுக்கல்வி நாள்காட்டியை ஏற்றுக்கொள்ள / மாற்றியமைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது http://ncert.nic.in/aac.html
|
வகுப்பு – 1 முதல் 8 வரை
|
முதன்மைப் பிரிவுகளுக்கு இணைய வகுப்புகள் நடத்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தீர்மானிக்கும் நாட்களில் ஒவ்வொரு வகுப்பும் 30-45 நிமிடங்களுக்கு இரண்டு அமர்வுகளுக்கு மேல் இணையம் மூலம் ஒத்திசைவுக் கற்றல் மேற்கொள்ளப்படலாம்.
|
வகுப்பு – 9 முதல் 12 வரை
|
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தீர்மானித்த நாட்களில் இணையம் மூலம் ஒத்திசைவுக் கற்றல் தலா 30-45 நிமிடங்களுக்கு நான்கு அமர்வுகளுக்கு மேல் மேற்கொள்ளப்படலாம்.
|
பள்ளித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இந்த வழிகாட்டுதல்கள் இணைய பாதுகாப்பு மற்றும் தனியுரிமை நடவடிக்கைகளை உறுதிசெய்யும் போது தேவை மதிப்பீடு, திட்டமிடல் மற்றும் இணையக் கல்வியை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விவரிக்கிறது. சிறப்புத் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஆதரவையும் இது கோடிட்டுக் காட்டுகிறது. மாணவர்களின் நிலைக்கு ஏற்ப திரையிடல் நேரத்தை அத்தியாவசிய அளவுருவாக வைத்திருக்கும் சீரான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் செயல்பாடுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
பெற்றோர்களைப் பொறுத்தவரை, வீட்டிலுள்ள குழந்தைகளுக்கான இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் உடல், மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் அவசியத்தைப் புரிந்து கொள்ள இந்த வழிகாட்டுதல் உதவுகிறது. உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான வழிகாட்டுதல்கள் அனைத்துப் பயனாளர்களின் நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்களில் வலியுறுத்தப்படுகின்றன. இதனால் டிஜிட்டல் சாதனங்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் குழந்தைகள் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள் அல்லது எதிர்மறையாக பாதிக்கப்படுவதில்லை (ஒரே இடத்தில் ஒரு புறமாக அமர்வதால் ஏற்படும் குறைபாடுகள், கண் பிரச்சினைகள் மற்றும் பிற உடல் பிரச்சினைகள்).. மேலும் இது பணிச்சூழலியல் மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்து செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றை போதுமான அளவு வழங்குகிறது.
வழிகாட்டுதல்கள் டிஜிட்டல் / இணையம் / நேரடிக் கல்வி ஒலிபரப்பு தொடர்பான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன, இது நாடு முழுவதும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பயனளிக்கிறது. இந்த முயற்சியில் டிக்ஷா, ஸ்வயம் பிரபா, ஸ்வயம் மூக்ஸ், ரேடியோ வாகினி, சிக்ஷா வாணி, சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு உள்ளடக்கம் மற்றும் ஐ.டி.பி.எல் ஆகியவை பங்கு பெற்றுள்ளன. பலதரப்பட்ட பன்முகத்தன்மையால் வகைப்படுத்தப்பட்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில், டிஜிட்டல் கல்வி முறைகளுக்கு மாறுவதற்கு பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த நிறுவனங்கள், மற்றும் தேசிய அளவிலான நிறுவனங்கள் COVID-19 க்கு பிந்தைய காலத்தைத் தக்கவைக்கும் ஒரு மாற்றத்திற்காக கைகோர்க்க வேண்டும்.
வழிகாட்டுதல்களுக்கு தயவுசெய்து பின்வரும் இணைப்பைக் காண்க:
https://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/upload_document/pragyata-guidelines.pdf
*****
(Release ID: 1638624)
Visitor Counter : 623
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam