ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

மூன்று மொத்த மருந்துப் பூங்கா மற்றும் நான்கு மருத்துவ சாதனங்கள் பூங்காக்களை அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய மருந்தியல் துறை இறுதி செய்து வருகிறது : திரு.கவுடா.

Posted On: 13 JUL 2020 5:12PM by PIB Chennai

நாட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள மூன்று மொத்த மருந்துப் பூங்காக்கள் மற்றும் நான்கு மருத்துவ சாதனப் பூங்காக்கள் அமையும் இடத்தைத் தேர்வு செய்வதற்கான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய மருந்தியல் துறை இறுதி செய்து வருவதாகமத்திய ரசாயனம், உரத்துறை அமைச்சர் திரு.டி.வி.சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

இந்த உத்தேச மருந்துப் பூங்காக்களில் ஒன்றை, பஞ்சாப் மாநிலம் படின்டா-வில் அமைப்பது குறித்து பரிசீலிக்கக் கோரும் கடிதம் ஒன்றை, அம்மாநில நிதியமைச்சர் திரு.மன்ப்ரீத் சிங் பாதல், புதுதில்லியில் இன்று திரு.டி.வி.சதானந்த கவுடாவை சந்தித்து நேரில் வழங்கினார்.  

செயல்தன்மையுடைய மருந்து மூலப்பொருள்/ முக்கிய தொடக்கப் பொருள்கள் மற்றும் மருத்துவ சாதனங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், மூன்று மொத்த மருந்துப் பூங்காக்கள் மற்றும் நான்கு மருத்துவ சாதனப் பூங்காக்கள் அமைக்க, மத்திய அமைச்சரவை மார்ச் 12, 2020 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.   ஒவ்வொரு மொத்த மருத்துவப் பூங்கா அமைப்பதற்கும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அதிகபட்சம் ரூ.1,000 கோடி வரையிலும்மருத்துவ சாதனப் பூங்காக்களுக்கு தலா ரூ.100 கோடி வரையிலும் மானிய உதவியாக வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.   இது தவிர, நாடு முழுவதும் முக்கிய தொடக்கப் பொருள்கள் / மருந்து இடைநிலைப் பொருள்கள் மற்றும் செயல்தன்மையுடைய மருந்து மூலப் பொருள்கள் மற்றும் மருத்துவ சாதனங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.   இத்திட்டத்திற்கு, மொத்தம் ரூ.13,760 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதுமொத்த மருநதுப் பூங்காங்களை ஊக்குவிக்கும் திட்டம்ரூ.46,400 கோடி மதிப்பிலான மொத்த மருந்துகள் உற்பத்திக்கு ஊக்கமளிப்பதாக அமைவதுடன், மருத்துவ சாதனப் பூங்காக்களை அமைப்பதன் மூலம் ரூ.68,437 கோடி மதிப்புள்ள மருத்துவ சாதனங்கள் உற்பத்திக்கும் வழிவகுக்கும்இந்தத் திட்டங்கள் அனைத்தும், குறிப்பிடத்தக்க அளவிற்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்   

                                                                       *****



(Release ID: 1638358) Visitor Counter : 215