சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தேசிய அளவில் குணம் அடைவோர் விகிதம் 62.42 விழுக்காடாக உயர்வு


18 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் தேசிய அளவை விட அதிகமாகும்

உயிரிழப்பு 2.72 விழுக்காடாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

30 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் தொற்றால் உயிரிழப்பு விகிதம் தேசிய அளவை விட குறைவாகும்

Posted On: 10 JUL 2020 2:53PM by PIB Chennai

கொவிட்-19 தொற்றியிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது கடந்த 24 மணி நேரத்தில் 19,138 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து கோவிட்-19 தொற்றியிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி  மொத்தம் 4,95,515  ஆக உள்ளது.   தேசிய அளவில் குணம் அடைவோர் விகிதம் 62.42 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

கொவிட்-19 தொற்றுக்கு  2,76,882  பேர் சிகிச்சை பெற்று தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றனர்.

மத்திய அரசு , மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மேற்கொண்ட, செயல்திறன் மிக்க நடவடிக்கைகளாலேயே கொவிட் தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது.

இந்திய அளவில் கொவிட் தொற்றால் இறப்பவர்களின் விகிதம் 2.72 விழுக்காடாக உள்ளது. இது உலகின் மற்ற நாடுகளில் உள்ள விகிதத்தை விட குறைவாகும்.

 

நாள்தோறும் நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,83,659  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் மொத்தம்  1,10,24,491  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் மருத்துவப் பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஆய்வகங்கள் 835,  தனியார் ஆய்வகங்கள் 334 என மொத்த ஆய்வகங்களின் எண்ணிக்கை 1169 ஆக உயர்ந்துள்ளது. இதன் விவரங்கள்:

·         உடனடி RT PCR அடிப்படையிலான பரிசோதனை   ஆய்வகங்கள் : 614 (அரசு: 382 + தனியார்: 232)

·         TrueNat அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 458 (அரசு: 418 + தனியார்: 40)

·         CBNAAT அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 97 (அரசு: 35 + தனியார்: 62)

கோவிட்-19 குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களையும், கோவிட்-19 தொடர்பான  தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்கள் வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள தயவுசெய்து இந்த இணையதளத்தைப் பாருங்கள்: https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA

 

****


(Release ID: 1637819) Visitor Counter : 240