பாதுகாப்பு அமைச்சகம்
லடாக்கில் உள்ள லே பொது மருத்துவமனையின் வசதி நிலை குறித்து இந்திய ராணுவம் தெளிவுபடுத்துகிறது.
प्रविष्टि तिथि:
04 JUL 2020 1:47PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 03, 2020 அன்று லேவில் உள்ள பொது மருத்துவமனைக்கு விஜயம் செய்த போது பார்வையிட்ட மருத்துவமனை வசதியின் நிலை குறித்து சில பகுதிகளில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நமது துணிச்சலான ஆயுதப்படைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதில் அபிப்ராய பேதங்கள் முன்வைக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. ஆயுதப்படைகள் தங்கள் பணியாளர்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்கின்றன.
இந்த 100 படுக்கைகளுடன் உள்ள மருத்துவ வசதி, நெருக்கடி காலத்தில் விரிவாக்கப்பட்டதில் ஒரு பகுதியாகும், இது பொது மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியாகும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கோவிட்-19 நெறிமுறைகளின் படி பொது மருத்துவமனையின் சில வார்டுகளைத் தனிமைப்படுத்தும் வசதிகளுடையதாக மாற்ற வேண்டும். எனவே, பொதுவான பயிற்சி ஆடியோ வீடியோ ஹால் ஆகப் பயன்படுத்தப்பட்ட அரங்கம், ஒரு வார்டாக மாற்றப்பட்டது, ஏனெனில் இந்த மருத்துவமனை கோவிட் சிகிச்சைக்கான மருத்துவமனையாகவும் செயல்பட்டது.
கோவிட் பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக கால்வானில் இருந்து வந்ததிலிருந்து காயமடைந்த வீர்ர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். தலைமை இராணுவத் தளபதி ஜெனரல் எம். எம். நாரவனே மற்றும் ராணுவத் தளபதியும் அதே இடத்தில் காயமடைந்த வீர்ர்களை பார்வையிட்டனர்.
(रिलीज़ आईडी: 1636377)
आगंतुक पटल : 361
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam