சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 அண்மைத் தகவல்கள் குணமடையும் விகிதம் கூடி, 59.43 விழுக்காட்டை எட்டியது கொவிட் தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 1,30,000 அதிகமாகும்

இடுகை இடப்பட்ட நாள்: 01 JUL 2020 5:22PM by PIB Chennai

மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொவிட்-19 நோயாளிகள் குணமடையும் விகிதம் 59.43 விழுக்காட்டை எட்டியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, கொவிட்-19 தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 1,27,864 அதிகமாகும்.

இது வரை 3,47,978 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து, சீராக அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது குணமடைந்தோர் எண்ணிக்கை 59.43 சதவீதத்தை எட்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 13,157 கொவிட்-19 நோயாளிகள் குணமாகியுள்ளனர்.

தற்போது 2,20,114 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

தற்போது, கொவிட்டை கண்டறியும் பரிசோதனைச் சாலைகள் தொடர்ந்து அரசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது 1056, கொவிட்-19 பரிசோதனைச் சாலைகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இதில் அரசு பரிசோதனைச் சாலைகள் 764, தனியார் பரிசோதனைச் சாலைகள் 292.

· நிகழ்நேர பிசிஆர் (Real Time – RT PCR) அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 576 (அரசு : 365 + தனியார் : 211),

· ட்ரூனேட் (TrueNat) அடிப்படையிலானச் சோதனைச் சாலைகள் – 394 (அரசு : 367 + தனியார் : 27)

· CBNAAT அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 86 (அரசு  : 32 + தனியார் : 54) ஆகும்.

பரிசோதனை செய்வதும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,17,931 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 88,26,585 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்த அனைத்து உண்மையான மற்றும் அண்மைத் தகவல்களுக்கு https://www.mohfw.gov.in/ and @MoHFW_INDIA என்ற இணையதளங்களைத் தவறாமல் பார்க்கவும்.


(வெளியீட்டு அடையாள எண்: 1635836) வருகையாளர் எண்ணிக்கை : 238
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia