நிதி அமைச்சகம்

ஜூன், 2020-க்கான ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் ஜூன் மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 90,917 கோடி

Posted On: 01 JUL 2020 12:51PM by PIB Chennai

2020, ஜூன் மாதத்தில் வசூலான மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ. 90,917 கோடி. இதில் மத்தியப் பொருள்கள் மற்றும் சேவை வரி (CGST) வசூல் ரூ. 18,980 கோடி, மாநில பொருள்கள் மற்றும் சேவை வரி வசூல் (SGST) ரூ. 23,970 கோடி, ஒருங்கிணைந்த பொருள்கள் மற்றும் சேவை வரி வசூல் (IGST ) ரூ. 40,302 கோடி (இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் மூலம் வசூலான தொகை ரூ.15,709 கோடி உள்பட) மற்றும் செஸ் வரி ரூ.7,665 கோடி (இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் மூலம் வசூலான தொகை ரூ. 607 கோடி உள்பட) ஆகும்.

மத்திய பொருள்கள் மற்றும் சேவை வரிக்கு (CGST) ரூ.13,325 கோடியும் மாநில பொருள்கள் மற்றும் சேவை வரிக்கு (SGST) ரூ. 11,117 கோடியும் ஒருங்கிணைந்த பொருள்கள் மற்றும் சேவை வரியிலிருந்து (IGST ) அரசு வழக்கமான தீர்வாக செலுத்தியுள்ளது. இந்தத் தீர்வுக்குப் பிறகு மத்திய அரசும், மாநில அரசுகளும் 2020 ஜூன் மாதத்தில் ஈட்டிய மொத்த CGST வருவாய் ரூ. 32,305 கோடி, SGST ரூ. 35,087 கோடி ஆகும்.

இந்த மாதத்திற்கான வருவாய், இதே மாதத்தில் கடந்த ஆண்டு வசூலான ஜிஎஸ்டி வருவாயில் 91 சகவிகிதமாகும். இந்த மாதத்தில் இறக்குமதியான பொருள்கள் மூலம் கிடைத்த வருவாய் 71விகிதமாகும். உள்நாட்டுப் பரிவர்த்தனையின் வருவாய் (சேவைகளின் இறக்குமதி உள்பட), கடந்த ஆண்டு இதே மாதத்தில் இவற்றின் மூலம் கிடைத்த வருவாயில் 97விகிதமாக  இருந்தது. ஜூன் மாதத்தில், பிப்ரவரி மாத வருமானம், ஜிஎஸ்டி வருமானக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கு தளர்வான நேர அட்டவணையை அரசு அனுமதித்துள்ளதால் 2020 மே  மாதத்தில், சில வருமானங்களுக்குக் கூடுதலாக மார்ச் மற்றும் ஏப்ரல் 2020க்கான வருமானக் கணக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மே  2020க்கான சில வருமானக் கணக்குகள், ஜூன் மாத்தில் தாக்கல் செய்யப்படவில்லையெனில், ஜூலை 2020-இல் முதல் சில நாட்களில் தாக்கல் செய்யப்படும்.

கோவிட்-19 வைரஸ் தொற்றுப்பரவல் நடப்பு நிதியாண்டின் வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேசப் பரவலால் முதலில் பொருளாதாரத்தில் தாக்கத்தை சந்திக்க நேர்ந்தது. இரண்டாவதாக வருமானக் கணக்குகளைத் தாக்கல் செய்வதிலும், வரி செலுத்துவதிலும் வைரஸ் தொற்றுப் பரவலால் அரசு அளித்த தளர்வுகள் காரணமாகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனினும், கடந்த மூன்று மாதங்களின் புள்ளிவிவரங்கள் ஜிஎஸ்டி வருவாய் மீட்டெடுக்கபட்டதை தெளிவுபடுத்துகின்றன. ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.32,294  கோடி. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூலான தொகையில் 28விகிதமாகும். மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.62,009  கோடி. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூலான தொகையில் 62 விகிதமாகும். ஆண்டின் முதல் காலாண்டில் ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வசூலான தொகையில் 59விகிதமாகும். இருப்பினும் 2020 மே மாதத்திற்கான வருமானக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கு, வரி செலுத்துவோர் பெரும்பாலோருக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது.

நடப்பு ஆண்டில் மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வருவாயின் நிலவரம் குறித்து விளக்கப்படம் தெளிவுபடுத்துகிறது. ஜூன் 2019 மற்றும் அதன் முழு ஆண்டுடன் ஒப்பிடும்போது ஜூன் 2020-இல் ஒவ்வொரு மாநிலத்திலும் ஜிஎஸ்டி வசூல் பற்றிய  புள்ளி விவரங்கள் மாநில வாரியாக அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



(Release ID: 1635821) Visitor Counter : 276