எஃகுத்துறை அமைச்சகம்

ஸ்டீல் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக நடைபெற்ற வெபினாருக்கு திரு தர்மேந்திர பிரதான் தலைமை வகித்தார்.

Posted On: 30 JUN 2020 1:41PM by PIB Chennai

ஸ்டீல் மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று ”இஸ்பட்டி இரடா: கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு தொழில் பிரிவுகளில் ஸ்டீல் பயன்பாட்டை மேம்படுத்துதல்” என்ற தலைப்பிலான் வெபினாருக்குத் தலைமை வகித்தார்.  ஸ்டீல் அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு ஃபாகன் சிங் குலஸ்தே, ஸ்டீல் அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் உயரதிகாரிகள், முன்னணித் தொழிற்சாலையினர், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் ஸ்டீலைப் பெருமளவில் பயன்படுத்துபவர்கள் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள் ஆகியோர் இந்த வெபினாரில் கலந்து கொண்டனர். 

இந்த வெபினாரில் உரையாற்றிய திரு பிரதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஸ்டீல் தொழில் மிக முக்கியப் பங்கினை ஆற்றுவதோடு  உலக அளவில் ஸ்டீல் உற்பத்தி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளதோடு தரமான பொருள்களை உருவாக்குவதற்கான திறனும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.  ஆனால் நம் நாட்டில் தனிநபருக்கான ஸ்டீல் நுகர்வு என்பது உலக சராசரியோடு ஒப்பிட்டால் மூன்றில் ஒரு பங்காகத்தான் இருக்கிறது.  எனவே நாம் ஸ்டீல் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

இஸ்பட்டி இரடாவைக் குறித்துப் பேசும் போது அமைச்சர் இஸ்பட் என்பது வெறும் உலோகம் மட்டுமல்ல.  அது மனதின் ஒரு நிலையாகும்.  இந்தியாவானது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பெற்ற நாடாக ஆவதற்கான இஸ்பட்டி இரடாவைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.  இது ஒரு வாசகம் மட்டுமல்ல.  பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், ஏழைகளின் நிலைமையை மேம்படுத்துதல், சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் ஆகியவற்றுக்கான அரசின் கடப்பாட்டை வெளிப்படுத்துகின்ற முழக்கம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  ஒருங்கிணைந்த இஸ்பட்டி இரடா பிராண்டிங் முகாமுக்கு நாட்டில் ஸ்டீல் பயன்பாட்டை பொருத்தமான வகையில் அதிகரித்தல் என்பதே நோக்கம் ஆகும்.  பயன்படுத்த எளிமையானதாக, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக, சிக்கனமானதாக, அனைவரும் வாங்கக் கூடியதாக, வலுவைத் தரும் உலோகமாக ஸ்டீலைப் பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும் என்பது தான் இந்த இயக்கத்தின் நோக்கம் ஆகும்.



(Release ID: 1635395) Visitor Counter : 198