புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

புள்ளியியல் தினம், ஜூன் 29, 2020-ஆம் தேதி கொண்டாடப்பட்டது.


அடிப்படைக் கருத்து: நிலையான வளர்ச்சி இலக்குகள்.

Posted On: 29 JUN 2020 4:44PM by PIB Chennai

அன்றாட வாழ்வில், புள்ளியியல் பயன்பாட்டைப் பிரபலப்படுத்தவும், மக்கள் நலத்திட்டங்களை உருவாக்குவதில், புள்ளியியல் எப்படி உதவுகிறது என்பதை மக்களுக்கு உணர்த்தவும் புள்ளியியல் தினத்தை மத்திய அரசு கொண்டாடி வருகிறது. தேசியப் புள்ளியியல் அமைப்பை உருவாக்கியதில், பேராசிரியர். பி.சி.மகலனோபிஸின் மதி்ப்பிட முடியாத பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அவரது பிறந்த தினமான ஜூன் 29ஆம் தேதியன்று, புள்ளியியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு உலகளாவிய தொற்று காரணமாக, புள்ளியியல் தினம், காணொளிக் காட்சிக் கருத்தரங்கு மூலம் கொண்டாடப்பட்டது. இது பல சமூக இணையதளங்கள் மூலமாக தேசிய அளவிலும், உலகளவிலும், நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்தப் புள்ளியில் தினத்தின் அடிப்படைக் கருத்து நிலையான வளர்ச்சி இலக்கு (SDG)- 3 (ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்வது மற்றும் அனைத்து வயதினருக்கான நலத்தை ஊக்குவிப்பது) & SDG- 5 ( பாலின சமத்துவத்தை அடைவது மற்றும் அனைத்துப் பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது). 

புள்ளியியல் தினம், 2020 கூட்டத்தில், மத்தியப் புள்ளியல் அமைச்சகம், மற்றும் திட்ட அமலாக்கம்(MoSPI) மற்றும்  திட்டமிடல் அமைச்சகத்தின்  இணையமைச்சர்(தனிப் பொறுப்பு) திரு. ராவ் இந்தர்ஜித் சிங் உரையாற்றியானர்.

 

மத்திய அரசு, மாநில அரசு/யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் அமைப்புகளின் அதிகாரப்பூர்வப் புள்ளியியல் நிபுணர்களின், சிறந்த சாதனையை அங்கீகரிக்க, ‘அதிகாரப்பூர்வப் புள்ளியியலில்  பேராசிரியர்.பி.சி.மகலனோபிஸ் தேசிய விருதைதிட்ட அமலாக்கத்துறை(MoSPI) உருவாக்கியுள்ளது. இந்தியாவில் தேசியப் புள்ளியியல் அமைப்பில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டாக்டர். சக்கரவர்த்தி ரங்கராஜனின் சிறப்பானப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அவருக்குப் பேராசிரியர் பி.சி.மகலனோபிஸ் தேசிய விருது வழங்கப்பட்டது.  

புள்ளியியல் துறையில் தங்களின் வாழ்நாள் பங்களிப்பை அளித்தற்கு, தேசிய மருத்துவப் புள்ளியல் கழகத்தின் (NIMS) முன்னாள் இயக்குர் டாக்டர்.அரவிந்த் பாண்டே, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்(ICMR) மற்றும் மத்திய அரசின் திட்ட அமலாக்கத்துறையின் முன்னாள் கூடுதல் தலைமை இயக்குர் டாக்டர். அகிலேஷ் சந்திரா குல்ஸ்ரேஷ்தா ஆகியோருக்குக் கூட்டாக, ‘புள்ளியியலில் பேராசிரியர் பி.வி. சுகாத்மே தேசிய விருது 2020’ வழங்கப்பட்டது. புள்ளியியல் தொடர்பாக அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட, உடனடி கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற முதுநிலை மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர்.

 

*****



(Release ID: 1635166) Visitor Counter : 407