பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

திரு.தர்மேந்திர பிரதான், ஃபரிதாபாத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளாகத்தை திறந்து வைத்தார்

Posted On: 29 JUN 2020 1:31PM by PIB Chennai

பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் க்குத்துறை  அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், ஹரியானா மாநில முதலமைச்சர் திரு.மனோகர் லால்டன், இணைந்து இந்திய எண்ணெய் நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் அதன் திறனை  செயல்படுத்தும் மையத்தை இன்று திறந்து வைத்தார். ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் 67-வது துறையில் அமைக்கப்ட்டுள்ள இந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளாகம் இரண்டாவது வளாகம் ஆகும். ரூ. 2282 கோடி முதலீட்டில் சுமார் 59 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய மையம் அமைக்கப்படுள்ளது. இந்த புதிய வளாகம் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு மேம்படுத்தியுள்ள பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து செயல்விளக்கம் அளிப்பதையும் அதன் திறனை செல்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் ஃபரிதாபாத்தில் 13-வது துறையில் தற்போது இயங்கி வரும் வளாகத்துடன் இணைந்து இப்புதிய வளாகம் செயல்படும்.

புதிய வளாகத்தின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பானது, மாற்று மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி களங்களில் அதிநவீன ஆய்வுக்கூடங்கள் மற்றும் முன்னோடி ஆலைகளை கொண்டுள்ளது. எடுத்துக்காட்டு: எரிபொருள் செல், ஹைட்ரஜன், வாயுருவாக்கம் மற்றும் சூரியசக்தி ஆராய்ச்சி, அரை வணிக நானோ-பொருள்கள் உற்பத்தி பிரிவு, பெருக்க அளவீடு, பெட்ரோ – ரசாயன முன்னோடி தொழிற்கூடங்கள், கிரியாயூக்கிகள், உயிரி தொழிற்நுட்பம் முதலியனவாகும்.

 

இந்நிகழ்வில் உரையாற்றிய திரு.பிரதான், “இந்திய எண்ணெய் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் பல ஆண்டுகளாக கீழ்நிலை பெட்ரோலிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுக்கு ஒரு அதிநவீன ஆராய்ச்சி நிறுவனமாக மலர்ந்துள்ளது. இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப உள்நாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளில் கவனம் செலுத்தி வருகிறது. மாண்புமிகு பிரதமரின் சுயசார்புள்ள இந்தியா என்ற கனவுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது” என்று தெரிவித்தார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், மாற்று எரிசக்தி, தூய்மையான மற்றும் உள்நாட்டு எரிசக்தி தீர்வுகளுக்கான ஒரு ஆய்வகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவை எரிசக்தித் துறையில் சுயசார்பு கொண்ட நாடாக மாற்றும் இலக்கை எட்டுவதற்கும், மாண்புமிகு பிரதமரின் சுயசார்புள்ள இந்தியா தொலைநோக்குப் பார்வையை நிறைவு செய்வதற்கும் இது ஒரு பெரிய அளவிலான திட்டம் என்றும் திரு.பிரதான் எடுத்துரைத்தார்.

 

கொரோனா நெருக்கடி நேரத்தின்போது, ​​உலக நாடுகளுக்கு மருந்துகளை வழங்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் பெட்ரோ கெமிக்கல் தேவை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதியை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுகொண்டார். இந்தியாவை ஒரு பெட்ரோ கெமிக்கல் மையமாகவும் சுயசார்புள்ள நாடாகவும் மாற்றுவதற்கு, தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்தார்.



(Release ID: 1635130) Visitor Counter : 207