உள்துறை அமைச்சகம்
தேச ஒற்றுமைக்கான சர்தார் படேல் விருது-2020 க்கான பரிந்துரைகளைப் பெறுவதற்கு கடைசித் தேதி ஆகஸ்ட் 15 வரை நீட்டிப்பு
Posted On:
26 JUN 2020 4:11PM by PIB Chennai
தேசத்தின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு சிறந்த பங்களிப்பு செய்பவர்களுக்கு வழங்கப்பட உள்ள, உயர்ந்த குடிமை விருதான, தேச ஒற்றுமைக்கான சர்தார் படேல் விருதுக்கான பரிந்துரைகளை இணையதளம் வாயிலாக பெறுவதற்கு கடைசித் தேதி 2020 ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளமான https://nationalunityawards.mha.gov.in வாயிலாக அனுப்ப வேண்டும்.
மத்திய அரசு சர்தார் வல்லபாய் படேல் பெயரில் இந்த விருதை நிறுவியுள்ளது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மேம்படுத்துவதற்கு ஊக்கமளிக்கும் பங்களிப்பு செய்துள்ளவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக இந்த விருது நிறுவப்பட்டுள்ளது.
----
(Release ID: 1634530)
Visitor Counter : 203