உள்துறை அமைச்சகம்

பிகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில், மின்னல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்தோருக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா இரங்கல்

“பிகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் மின்னல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதை அறிந்து மிகுந்த துயரமடைந்துள்ளேன்”: திரு.அமித்ஷா
“இந்தப் பேரிடரில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்” : திரு.அமித்ஷா

இடுகை இடப்பட்ட நாள்: 26 JUN 2020 12:34PM by PIB Chennai

பிகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் மின்னல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்தோருக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.  திரு.அமித் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  “பிகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில், மின்னல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதை அறிந்து மிகுந்த துயரமடைந்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.  

இரு மாநிலங்களிலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

“இந்தப் பேரிடரில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன்,  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்றும் திரு.அமித் ஷா கூறியுள்ளார். 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1634482) வருகையாளர் எண்ணிக்கை : 201
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Manipuri , Bengali , Punjabi , Odia , Telugu , Malayalam