கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
அகழாய்வு கழிவுப் பொருள்களை மறுசுழற்சி செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறு திரு.மாண்டவியா வலியுறுத்தல்.
Posted On:
24 JUN 2020 2:56PM by PIB Chennai
அகழாய்வு கழிவுப்பொருள்களை மறுசுழற்சி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதிப்பதற்காக மத்திய கப்பல் துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா இன்று காணொளிக் காட்சி மூலம் கப்பல் துறை அமைச்சகம், இந்திய அகழாய்வுக் கழகம், இந்தியத் துறைமுகங்கள் சங்கம், இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள், பெரிய துறைமுகங்களின் தலைவர்கள், இத்துறையின் நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
கடற்கரையோரம், இந்திய நதித் துறைமுகங்கள் பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளும் போது கிடைக்கும் பொருள்களை மறுசுழற்சி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு இந்திய அகழாய்வுக் கழகத்தை திரு. மாண்டவியா கேட்டுக்கொண்டார். நீர்வழிகளைப் பாதுகாப்பாகப் பராமரிக்கவும், கப்பல்கள் சிரமம் இன்றி சென்று வர ஏதுவாகவும், நடத்தப்படும்அகழாய்வில் கிடைக்கும் பொருள்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் அகழாய்வுக்கான செலவைக் குறைக்க முடியும் என்று திரு,மாண்டவியா கூறினார். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், சுற்றுச்சூழல் மாசை பூஜ்யம் சதவீதமாகக் குறைப்பதையும் கருத்தில் கொண்டு, அகழாய்வுக் கழிவுகளைக் குறைந்த செலவில் கொண்டு செல்வதற்கான மாதிரியை தனியார் நிறுவனங்கள் உருவாக்குமாறு அவர் யோசனை தெரிவித்தார்.
அகழாய்வில் கிடைக்கும் கழிவுகளை, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களாக மறுசுழற்சி மூலம் மாற்றுவதன் வாயிலாக நீடித்த வளர்ச்சியை இந்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என திரு.மாண்டவியா கூறினார். இது, ‘கழிவிருந்து செல்வம்’ என்னும் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் வெற்றிகரமான தொலைநோக்கை வலுப்படுத்துவதாக அமையும் என அவர் கூறினார்.
(Release ID: 1633905)
Visitor Counter : 237