அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சி.எஸ்.ஐ.ஆர் – என்.இ.இ.ஆர்.ஐ நிறுவனத்தில் 3000க்கும் அதிகமான கோவிட்-19 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

Posted On: 24 JUN 2020 12:46PM by PIB Chennai

மத்திய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் குழுமத்தின் (Council of Scientific and Industrial Research - CSIR) – தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-National Environmental Engineering Research Institute (CSIR-NEERI)) ஏப்ரல் 2020 முதல் கோவிட்-19 பரிசோதனை மையம் செயல்பட்டு வருகின்றது. கோவிட்-19 தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கு இங்கு இதுவரை 3000க்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

கோவிட்-19 தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக ஒரு நாளைக்கு 50 மாதிரிகளை பரிசோதிக்கத் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை CSIR-NEERI கொண்டுள்ளது.  பரிசோதனைக்கு முன்பு தேவைப்படும் அனைத்து விதமான பயோ-சேஃப்டி மற்றும் பயோ-செக்யூரிட்டிக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மருத்துவமனைசார் மாதிரிகளைப் பரிசோதிப்பதற்குத் தேவைப்படும் அனைத்துவிதமான கட்டாய அனுமதிகளையும் இந்தப் பரிசோதனை மையத்தை செயல்படுத்துவதற்காகப் பெற்றுள்ளோம் என்று CSIR-NEERI இயக்குநர் டாக்டர் ராகேஷ் குமார் கூறியுள்ளார்.

நாக்பூர் மற்றும் விதர்பாவை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து பெறப்படும் மாதிரிகள் இந்த மையத்தில் கோவிட்-19க்காகப் பரிசோதிக்கப்படுகின்றன.  மாதிரிகளைப் பரிசோதனை செய்வதோடு CSIR-NEERI நிறுவனமானது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் எந்தவிதமான தொற்றையும் பெற்றுக் கொள்வதைத் தடுக்கும் வகையில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை (PPE)  அவர்களுக்கு வழங்கி வருகிறது என்று CSIR-NEERI நிறுவனத்தில் உள்ள விஞ்ஞானி டாக்டர் பிரகாஷ் கும்பரே தெரிவித்து உள்ளார்.



(Release ID: 1633900) Visitor Counter : 156