உள்துறை அமைச்சகம்
ஜெகந்நாத் ரத யாத்திரையை ஒட்டி மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
Posted On:
23 JUN 2020 11:26AM by PIB Chennai
ஜெகந்நாத் ரத யாத்திரையை ஒட்டி மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா மக்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “ரத யாத்திரை என்ற புனித நிகழ்ச்சியின் போது என்னுடைய வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். மகாபிரபு ஜெகந்நாத் அனைவருக்கும் நல்ல உடல் நலமும், மகிழ்ச்சியும், வளமும் அளிக்கட்டும். நம் அனைவருக்கும் பகவான் ஜெகந்நாத் தொடர்ந்து அருள் வழங்கட்டும். நாட்டிலிருந்து பெருந்தொற்று ஒழியவும் அருள் வழங்கட்டும். ஜெய் ஜெகந்நாத்”
பூரி ரத யாத்திரையைக் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மத்திய அமைச்சர் நேற்று பாராட்டு தெரிவித்திருந்தார். ரத யாத்திரை நடைபெறும் என்பதை நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு குறித்து மொத்த தேசமும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக திரு.அமித்ஷா கூறினார் பிரதமர் திரு. நரேந்திர மோடி, பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், நமது மண்ணின் உயரிய பாரம்பரியங்கள் தொடர்வதை உறுதிப்படுத்துவதற்கான கலந்தாலோசனைகளுக்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். இது குறித்து தாம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்றும் திரு அமித்ஷா கூறியுள்ளார்.
(Release ID: 1633610)