நித்தி ஆயோக்

கார்பன் வெளியேற்றம் இல்லாத போக்குவரத்து : இந்தியாவில் குறைந்த அளவு கரியமில வாயுவை வெளியேற்றக்கூடிய போக்குவரத்துக்கு வழிவகுக்கும் சர்வதேசத் திட்டம்

Posted On: 22 JUN 2020 12:50PM by PIB Chennai

இந்தியாவில் கரியமில வாயு பயன்பாடு குறைவாக உள்ள போக்குவரத்துக்கு வழிவகுக்கக் கூடிய   “இந்தியாவில் கார்பன் வெளியேற்றம் இல்லாத போக்குவரத்து“   குறித்த ஆய்வைநிதிஆயோக்  அமைப்பு சர்வதேசப் போக்குவரத்து அமைப்புடன் இணைந்து, 24 ஜுன், 2020 அன்று   தொடங்க உள்ளது.  

போக்குவரத்துக் கொள்கை வகுத்தல் தொடர்பான அரசுகளுக்கிடையேயான அமைப்பான, சர்வதேசப் போக்குவரத்து அமைப்பில்,  2008-ம் ஆண்டு முதல் இந்தியா உறுப்பினராக உள்ளது

இணையவழியில் நடைபெற உள்ள தொடக்க விழாவில்சர்வதேசப் போக்குவரத்து அமைப்பின்  பொதுச் செயலாளர்  திரு. யங் தே கிம் மற்றும் நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி திரு.அமிதாப்காந்த் ஆகியோர் கூட்டாகத் தொடங்கிவைக்க உள்ளனர்மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைசாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளின் உயர் அதிகாரிகளும், சர்வதேசப் போக்குவரத்து அமைப்பின் அதிகாரிகளும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்

இணையவழியில் மேற்கொள்ளப்படும் இந்த நிகழ்ச்சியின் போதுஇந்தியாவில் உள்ள போக்குவரத்து மற்றும் பருவநிலை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு, இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தெரிவிக்கப்படும்.   இந்தியாவின் போக்குவரத்து முறையில் எதிர்கொள்ளப்பட்டு வரும் சவால்கள் மற்றும் கரியமில வாயு குறைப்புக்கான நோக்கத்துடனான தொடர்பு பற்றிய தகவல்களும் வழங்கப்படும்.   இந்த விவாதத்தின் போது,  இந்தியாவிற்கென தேவைப்படும் குறிப்பிட்ட அம்சங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து கவனம் செலுத்த உதவும்

இந்தியாவில் கார்பன் வெளியேற்றம் இல்லாத போக்குவரத்து“   என்ற திட்டம்,,  இந்தியாவிற்குத் தேவையான கார்பன் வெளியேற்றமற்ற போக்குவரத்து வடிவமைப்புக்கான மதிப்பீட்டுக் கட்டமைப்பை ஏற்படுத்தவும் வகை செய்யப்பட்டுள்ளதுதற்போதைய மற்றும் எதிர்காலப் போக்குவரத்து மற்றும் கரியமில வாயு வெளியேற்றம் குறித்த கொள்கை வகுக்கத் தேவையான  விரிவான புரிந்துணர்வை, அரசுக்கு வழங்கும்.  

•           என்ன :   “இந்தியாவில் கார்பன் வெளியேற்றம் இல்லாத போக்குவரத்து“   திட்டத்  தொடக்கம் 

•           எப்போது    :  புதன்கிழமை,  24 ஜுன்,    17:00  - 19:00 சர்வதேச நேரம்

•           எங்கே :   யூ டியூப் நேரலையில்  at https://youtu.be/l2G5x5RdBUM

•          

சர்வதேசப் போக்குவரத்து அமைப்பின் விரிவான நோக்கத்திற்கேற்ப,   “கார்பன் வெளியேற்றம் இல்லாத போக்குவரத்துதிட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படும்.     இது,   “வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் கார்பன் வெளியற்றம் இல்லாத போக்குவரத்து”  என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட உள்ளது.   உலகின் பல்வேறு பகுதிகளிலும் கார்பன் வெளியேற்றம் இல்லாத போக்குவரத்துக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறதுஇந்தியா, அர்ஜென்டினா, அஜர்பைஜான் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் தற்போது இதன் பங்குதாரர்களாக உள்ளன.   சர்வதேசப் போக்குவரத்து அமைப்பு மற்றும் உப்பர்தால் நிறுவனத்தின் கூட்டு முயற்சியாகஜெர்மன் அரசின் சுற்றுச்சூழல், இயற்கைப் பாதுகாப்பு மற்றும் அணுசக்திப் பாதுகாப்பு அமைச்சகத்தின், சர்வதேசப்  பருவநிலை மாற்ற முன்முயற்சி அமைப்பின் ஒத்துழைப்புடன் வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் கார்பன் வெளியேற்றம் இல்லாத போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  



(Release ID: 1633317) Visitor Counter : 287