சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 பற்றிய அண்மைச் செய்திகள்
மொத்தம் 2,13,830 நோயாளிகள் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
குணமடைந்தோர் விகிதம் 54.13 சதவீதமாக உயர்வு
Posted On:
20 JUN 2020 3:35PM by PIB Chennai
கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 9,120 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து, இதுவரை, மொத்தம் 2,13,830 பேர் கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். கொவிட்-19 நோயாளிகளில், குணமடைந்தோர் விகிதம் 54.13 சதவீதம் ஆகும்.
தற்போது, 1,68,,269 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.
அரசு பரிசோதனைக் கூடங்களின் எண்ணிக்கை 715 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தனியார் பரிசோதனைக் கூடங்களின் எண்ணிக்கையும் 259 ஆக அதிகரித்துள்ளது (மொத்தம் 974). அவற்றின் விவரம் வருமாறு;
ரியல் டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான ஆய்வகங்கள்; 543 ( அரசு; 350+ தனியார்; 193)
ட்ரூநேட் அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்; 356( அரசு; 338+ தனியார் 18)
சிபிஎன்ஏஏடி அடிப்படையிலான சோதனைக் கூடங்கள் ; 75( அரசு;27+ தனியார் ;48)
கடந்த 24 மணி நேரத்தில், 1,89,869 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. மொத்தம் சோதிக்கப்பட்ட மாதிரிகள் இதுவரை 66,16,496.
கொவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப விஷயங்கள், விதிமுறை வழிகாட்டுதல்கள், அறிவுரைகள் அடங்கிய அனைத்து அதிகாரபூர்வ, அண்மைத் தகவலுக்கு அவ்வப்போது https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA தளங்களை அணுகவும்.
தொழில்நுட்பம் தொடர்பான கேள்விகளை technicalquery.covid19[at]gov[dot]in என்ற தளத்துக்கு அனுப்பலாம். மற்ற கேள்விகளுக்கு ncov2019[at]gov[dot]in மற்றும் @CovidIndiaSeva என்ற தளங்களை அணுகலாம்.
கொவிட்-19 பற்றிய தகவல் ஏதேனும் தேவையென்றால், தொடர்பு கொள்ள வேண்டிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் உதவிமைய எண்கள்;+91-11-23978046 or 1075 ( கட்டணமில்லா தொலைபேசி). மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உதவிமைய எண்கள் பட்டியல் https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf என்ற தளங்களில் கிடைக்கும்
****
(Release ID: 1632933)
Visitor Counter : 182
Read this release in:
Punjabi
,
English
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam