சுற்றுலா அமைச்சகம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வாரம் முழுக்கக் கொண்டாட்டங்களை சுற்றுலா அமைச்சகம் நடத்துகிறது

Posted On: 19 JUN 2020 1:40PM by PIB Chennai

பிராந்திய அலுவலகங்களால் நடத்தப்பட்ட தொடர் நிகழ்ச்சிகளின் மூலமும், "வீட்டில் யோகா மற்றும் குடும்பத்துடன் யோகா" என்ற மையக் கொள்கையுடன் யோகாவின் மீது கவனம் செலுத்திய சமூக ஊடக நடவடிக்கைகளின் மூலமும், மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சர்வதேச யோகா தினத்துக்கான ஒரு வாரக் கொண்டாட்டங்கள் 15 ஜூன், 2020 அன்று தொடங்கின. பொதுமுடக்கத்தின் போது ஆரோக்கியமான உள்ளம் மற்றும் உடலுக்கான சுய உணர்வை உண்டாக்கும் நோக்கத்தோடு திட்டமிடப்பட்ட இந்த நடவடிக்கைகள், மெய்நிகர் ஊடகத்தின் மூலமாக கிடைக்க செய்யப்பட்டன.

கொண்டாட்டங்களின் சிறப்பம்சமாக, சுற்றுலா அமைச்சகத்தின் 'நமது நாட்டைப் பாருங்கள்' இணையக் கருத்தரங்கில் 20 ஜூன், 2020 அன்று மத்திய சுற்றுலா அமைச்சர் திரு. பிரகலாத் சிங் படேல் கலந்து கொள்ள, சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுடனான உரையாடல் நடைபெறும். 'பாரதம்: ஒரு கலாச்சார புதையல்' என்ற தலைப்பிலான இந்த நிகழ்வு, 20 ஜூன், 2020 அன்று மதியம் 2 மணியில் இருந்து 3 மணி வரை நடைபெறும். வியக்கத்தக்க இந்தியாவின் (Incredible India) சமூக ஊடகப் பக்கங்களான facebook.com/incredibleindia/ மற்றும் Youtube.com/incredibleindia ஆகியவற்றில் இந்தக் கருத்தரங்கு நேரலை செய்யப்படும்.

 

யோகா மற்றும் ஆரோக்கியத்தைப் பற்றிய இதர 'நமது நாட்டைப் பாருங்கள்' இணையக் கருத்தரங்குகள் வருமாறு:

 

19/06/2020 - காலை 11 மணியில் இருந்து மதியம் 12 வரை - யோகா மற்றும் ஆரோக்கியம் வழங்கும் சவாலான நேரங்களுக்கான ஒரு சமர்ப்பணம் யோகா குரு பரத் தாகூர் சர்வதேச யோகா பயிற்சியாளர் & ஆன்மிக குரு, டாக்டர். சின்மய் பாண்டியா - உதவி துணை வேந்தர் - தேவ் சன்ஸ்க்ரிதி பல்கலைக்கழகம், டாக்டர். லட்சுமிநாராயண் ஜோஷி - நாடி விஞ்ஞான் வல்லுநர், யோகா சிகிச்சை மற்றும் குணப்படுத்தும் அறிவியல்.

 

20/06/2020 - பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணி வரை - மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. பிரகலாத் சிங் படேல் தலைமையில் 5 புகழ்பெற்ற நபர்கள் கலந்து கொள்ளும் 'பாரதம்: ஒரு கலாச்சார புதையல்' என்ற இணையக் கருத்தரங்கம்.

 

21/06/2020 - காலை 11 மணியில் இருந்து மதியம் 12 வரை - திரு. அச்சல் மெஹ்ரா, தலைமை செயல் அதிகாரி, கிரீன்வே (ஒரு சமூக தாக்க நிறுவனம்) வழங்கும் 'யோகாவின் சேரிடமான இந்தியா'.

 

இந்தியாவின் வளம் மிக்க பாரம்பரியமான யோகாவையும், ஆரோக்கிய சுற்றுலாவையும் பிரதிநிதித்துவப் படுத்துவதே சர்வதேச யோகா தினத்தின் போது சுற்றுலா அமைச்சகத்தின் முயற்சியாகும்.

 

*****



(Release ID: 1632605) Visitor Counter : 192