சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 அண்மைத்தகவல்கள் குணமடைந்தோர் விகிதம் 52.47 விழுக்காடாக அதிகரிப்பு

கொவிட்-19வுடன் இணைந்துள்ள களங்கத்தை நீக்குவதற்கான கையேட்டை மத்திய சுகாதார குடும்பநல அமைச்சகம் வெளியிட்டது

Posted On: 16 JUN 2020 2:15PM by PIB Chennai

கடந்த 24 மணி நேரத்தில், 10,215 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்தம் 1,80,012 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 52.47 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளில் பாதி பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது

தற்போது 1,53,178 கொவிட் நோயாளி்கள் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், முன்னணியில் உள்ள மருத்துவப் பணியாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் கொவிட்-19 தொடர்பாக எதிர்கொள்ளும் களங்கத்தை (ஸ்டிக்மா) துடைப்பதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் விரிவான கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனைக் கீழ்காணும் இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் : https://www.mohfw.gov.in/pdf/GuidetoaddressstigmaassociatedwithCOVID19.pdf

-----


(Release ID: 1631893) Visitor Counter : 189