சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 பற்றிய அண்மை செய்திகள்

Posted On: 15 JUN 2020 5:38PM by PIB Chennai

கடந்த 24 மணி நேரத்தில் 7419 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்தம் 1,69,797 நோயாளிகள் இதுவரை கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது, குணமடைந்தோர் விகிதம் 51.08% ஆக உள்ளது. நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து குணமடைவதையே இது காட்டுகிறது.

தற்போது, 1,53,106 பேர் மருத்துவக் கணிகாணிப்பின் கீழ் உள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதித்தவர்களிடம் தொற்று கண்டறிவதற்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) சோதனைத் திறன் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. அரசு பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கை 653 ஆகவும், தனியார் ஆய்வகங்களின் எண்ணிக்கை 248 ஆகவும் (மொத்தம் 901). இதன் விவரம் வருமாறு;

ரியல்- டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான பரிசோதனைக்கூடங்கள்; 534 ( அரசு 347+ தனியார் 187)

ட்ரூநேட் அடிப்படையிலான பரிசோதனைக்கூடங்கள்; 296 ( அரசு 281+ தனியார் 15)

சிபிஎன்ஏஏடி அடிப்படையிலான பரிசோதனைக் கூடங்கள் ;71( அரசு 25+ தனியார் 46)

கடந்த 24 மணி நேரத்தில், 1,15,519 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 57,74,133 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.


(Release ID: 1631771) Visitor Counter : 258