சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ‘முழுமையாக டிஜிட்டல்’ ஆகும் முதல் கட்டுமானத் துறை நிறுவனமாகிறது.

Posted On: 12 JUN 2020 3:51PM by PIB Chennai

மிகப்பெரிய சீர்திருத்தங்களில் ஒன்றாக, சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 'முழுமையா டிஜிட்டல்' ஆக தனித்துவமான இணையம் சார்ந்த மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் பெருந்தரவுப் பகுப்பாய்வுத் தளம் - டேட்டா லேக் மற்றும் திட்ட மேலாண்மை மென்பொருளை துவக்கியுள்ளது. NHAI இன் முழுத் திட்ட மேலாண்மைப் பணிகளும் கையேடுகளிலிருந்து இணையமயமாக்கப்படுகிறது, இதில் ‘நேரக் கணக்குடன் பணிப்பாய்வு’ மற்றும் ‘எச்சரிக்கைப் பொறிமுறை’ உள்ளிட்ட முழுமையான திட்டச் செயலாக்க நடவடிக்கைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அனைத்துத் திட்ட ஆவணங்கள், ஒப்பந்த முடிவுகள் மற்றும் ஒப்புதல்கள் இப்போது இணைய தளம் மூலம் மட்டுமே செய்யப்படுகின்றன.

மேம்படுத்தப்பட்ட பகுப்பாய்வு மூலம், டேட்டா லேக் மென்பொருள் தாமதங்கள், சாத்தியமான சச்சரவுகளை முன்னறிவிப்பதுடன் முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்கும். எனவே முடிவெடுக்கும் முறையை விரைவுபடுத்துவதைத் தவிர, வரலாற்றுத் தரவின் அடிப்படையில் வெவ்வேறு மாற்றுகளின் நிதித் தாக்கங்களை இந்த அமைப்பு முறையா கணிக்கக் கூடும் என்பதால் சரியான நேரத்தில் முடிவுகளை எடுப்பதற்கும் இது உதவும். இது நிறைய சச்சரவுகளைக் குறைக்கும்.

NHAI க்கு ஏராளமான மத்தியஸ்த வழக்குகள் அதிக அளவு உரிமைகோரல்கள் மற்றும் எதிர் உரிமைகோரல்களுடன் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.

**********



(Release ID: 1631192) Visitor Counter : 439