ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
5 உரத் தொழிற்சாலைகளைப் புதுப்பிக்கும் பணியின் முன்னேற்றம் குறித்து திரு மாண்டவியா மீளாய்வு செய்தார்
Posted On:
12 JUN 2020 2:17PM by PIB Chennai
மத்திய இராசயனங்கள் மற்றும் உரங்கள் துறையின் இணையமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா காணொலிக் காட்சி மூலம் 5 உரத் தொழிற்சாலைகளை புதுப்பிக்கும் பணியின் முன்னேற்றம் குறித்து உரத்துறை அதிகாரிகளுடன் மீளாய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
கோரக்பூர், பரௌனி மற்றும் சிந்திரி ஆகிய இடங்களில் உள்ள ஹிந்துஸ்தான் உர்வரக் ரசாயன் லிமிடெட் (HURL), ராமகுண்டம் உரங்கள் மற்றும் வேதிப் பொருட்கள் லிமிடெட் (RFCL) மற்றும் தல்ச்சர் உரங்கள் லிமிடெட் (TFL) ஆகியன புதுப்பிக்கப்படும் 5 தொழிற்சாலைகள் ஆகும். ஆர்.எஃப்.சி.எல், ஹெச்.யூ.ஆர்.எல் மற்றும் டி.எஃப்.எல் ஆகிய 5 உரத்தொழிற்சாலைகளின் புதுப்பிப்புப் பணிக்கும் பொறுப்பாக இருக்கின்ற மூத்த அதிகாரிகள் இந்த பரிசீலனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேற்சொன்ன உரத் தொழிற்சாலைகள் அனைத்திலும் பௌதீக மற்றும் நிதிசார்ந்த பணிகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்த போது திரு மாண்டவியா இந்த புதுப்பிப்புத் திட்டங்களை விரைவில் நிறைவு செய்வதற்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறத்தினார்.
இந்திய அரசு யூரியா தொழில் பிரிவில் புதிய முதலீடுகளை செய்யும் வகையில் புதிய முதலீட்டுக் கொள்கை (NIP), 2012ஐ அறிவித்தது. யூரியா உற்பத்தியை பொறுத்தவரையில் இந்தியா சுயசார்பைப் பெற வேண்டும் என்பதுவே இந்தக் கொள்கையின் நோக்கம் ஆகும். இந்த என்.ஐ.பி 2012ன் கீழ் இந்திய உரக் கழகம் லிமிடெட் (FCIL) மற்றும் ஹிந்துஸ்தான் உரக் கழகம் லிமிடெட் (HFCL) ஆகியவற்றின் மேலே கூறிய மூடப்பட்ட 5 உரத் தொழிற்சாலைகளும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. புதுப்பித்தல் பணியின் கீழ் உள்ள 5 பொதுத்துறை தொழிற்சாலைகளாவன:
ராமகுண்டம் உரங்கள் மற்றும் வேதிப் பொருட்கள் லிமிடெட் (RFCL)
தல்ச்சர் உரங்கள் லிமிடெட் (TFL)
ஹிந்துஸ்தான் உர்வரக் ரசாயன் லிமிடெட் (HURL) [கோரக்பூர், பரௌனி மற்றும் சிந்திரி].
*****
(Release ID: 1631124)
Visitor Counter : 246