நிலக்கரி அமைச்சகம்

வர்த்தக நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலத்தை ஜூன் 18-ம் தேதியன்று மத்திய அரசு துவக்குகிறது

Posted On: 11 JUN 2020 6:31PM by PIB Chennai

வர்த்தக சுரங்கப் பணிகளுக்காக நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலத்தை, மத்திய அரசு “கட்டவிழ்க்கப்படும் நிலக்கரித்துறை : தற்சார்பு இந்தியாவுக்கான புதிய நம்பிக்கைகள்” என்ற மையப் பொருளில், இம்மாதம் 18-ம் தேதியன்று துவக்குகிறது. புதுதில்லி்யில் நடைபெறும் இந்த மெய்நிகர்  நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்.

            “நமது நாட்டில் முதன் முறையாக வர்த்தக ரீதியிலான நிலக்கரிச் சுரங்க ஏலத்தை ஜூன் 18-ம் தேதியன்று துவக்குகிறோம்.   இதில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். அவரது தொலைநோக்குப் பார்வையும், வழிகாட்டுதலும், நிலக்கரித்துறையில் “தற்சார்பு இந்தியா”வை எட்ட உதவும். இதனை அடைவதற்கான வழியில் பயணிக்கிறோம் என்பதில் பெருமை கொள்கிறேன்” என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி இன்று ட்விட்டரில்  பகிர்ந்துள்ளார்.

----------
 


(Release ID: 1631075) Visitor Counter : 341