பிரதமர் அலுவலகம்

பிரதமர் பாக்ஜான் தீ விபத்து குறித்து அசாம் முதல்வருடன் பேசினார், அனைத்து உதவிகளையும் அளிக்க உறுதி

இடுகை இடப்பட்ட நாள்: 10 JUN 2020 4:30PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, பாக்ஜான் தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து அசாம் முதல்வர் திரு சர்பானந்த  சோனோவாலுடன் தொலைபேசியில் உரையாடினார். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பிரதமர் அலுவலகம் பகிர்ந்துள்ள ட்விட் ஒன்றில் “பாக்ஜான் தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து அசாம் முதல்வர் திரு சர்பானந்த சோனோவாலுடன், பிரதமர் தொலைபேசி வாயிலாக விவாதித்தார். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் பிரதமர் உறுதியளித்தார். அங்குள்ள நிலைமை தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது”, என்று தெரிவித்துள்ளது.

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1630868) வருகையாளர் எண்ணிக்கை : 231