சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் செப்டம்பர் 30, 2020 வரை நீட்டிக்கப்பட்டது.

Posted On: 09 JUN 2020 4:47PM by PIB Chennai

மோட்டார் வாகனங்களின் சாலை ஆவணங்கள் செல்லுபடியாகும் தேதியை இந்த ஆண்டு செப்டம்பர் வரை நீட்டிப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை மற்றும் MSME அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று அறிவித்துள்ளார். அதன்படி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, 2020ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒரு ஆலோசனையை வழங்கியிருந்தது, அதில் உடற்தகுதி, அனுமதி (அனைத்து வகைகளும்), ஓட்டுநர் உரிமம், பதிவு செய்தல் அல்லது செல்லுபடிக் காலம் நீட்டிப்பு செய்ய முடியாத வாகனத்தின் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணமும் செல்லுபடியாகும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஊரடங்கு காரணமாக மற்றும் பிப்ரவரி 1, 2020  முதல் மே 31, 2020 வரை உள்ள காலகட்டத்தில் காலாவதியான ஆவணங்கள், அமலாக்க நோக்கங்களுக்காக மே 31 2020 வரை செல்லுபடியாவதாக கருதப்படலாம் என்றும் அமலாக்க அதிகாரிகள் அத்தகைய ஆவணங்களை ஜூன் 30, 2020  வரை செல்லுபடியாகும் என்று கணக்கில் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், கோவிட் - 19ஐத் தடுப்பதற்கான நிலைமையைக் கருத்தில் கொண்டும், மேலும் பெறப்பட்ட கோரிக்கைகளின் படியும், அமலாக்க நோக்கங்களுக்காக ஆவணங்கள் செல்லுபடியாகும் கால நீட்டிப்பை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க ஆலோசனை வழங்குமாறு திரு. கட்கரி தனது அமைச்சகத்திற்கு உத்தரவிட்டார்.

******(Release ID: 1630501) Visitor Counter : 95