ரெயில்வே அமைச்சகம்

கடந்த ஆண்டில் இந்திய ரயில்வேயின் சிறந்த பாதுகாப்பு செயல்திறன்; ஏப்ரல் 2019 முதல் ரயில் விபத்து காரணமாக ஒரு பயணி கூட மரணிக்கவில்லை.

Posted On: 08 JUN 2020 6:20PM by PIB Chennai

ஏப்ரல் 2019 - மார்ச் 2020வரையான கால ஆண்டில், இந்திய ரயில்வே மிகச் சிறந்த பாதுகாப்பு சாதனையைப் பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டு (01.04.2019 முதல் 08.06.2020 வரை) எந்தவொரு ரயில் விபத்திலும் எந்தவொரு ரயில் பயணிக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. 166 ஆண்டுகளுக்கு முன்பு 1853ஆம் ஆண்டில் இந்தியாவில் ரயில்வே அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் 2019-2020ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்த குறிப்பிடத்தக்க சாதனை அடையப்பட்டுள்ளது. கடந்த 15 மாதங்களில் ஒரு பயணி கூட மரணிக்காதது அனைத்து வகையிலும் பாதுகாப்பு செயல்திறனை மேம்படுத்திய இந்திய ரயில்வேயின் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாகும்.

பாதுகாப்பை மேம்படுத்த இந்திய ரயில்வே எடுத்த சில முக்கிய நடவடிக்கைகள் பின்வருமாறு:

  • மனிதர்களால் இயக்கப்படும் 1274 லெவல் கிராசிங்குகள் 2019-2020 ஆம் ஆண்டில் அகற்றப்பட்டுள்ளன.  2018-19ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 631 மனிதக் காவலர்களைக் கொண்ட லெவல் கிராசிங்குகள் மட்டுமே அகற்றப்பட்டன என்பது குறிப்பிடதக்கது. (கடந்த ஆண்டில் செய்யப்பட்டதை விட இரட்டிப்பாகும்). இதுவே மனிதர்களால் இயங்கும் லெவல் கிராசிங்குகளை அகற்றுவதில் உச்சபட்ச எண்ணிக்கையாகும்.

 

  • ரயில்வே துறையில் கிராசிங்குகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 2019-20 ஆம் ஆண்டில் மொத்தம் 1309 சாலை மேம்பாலங்களும்  / சுரங்கப்பாதை பாலங்களும் கட்டப்பட்டன.

 

  • 2019-20ஆம் ஆண்டில் மொத்தம் 1367 பாலங்கள் புனரமைக்கப்பட்டன.  கடந்த ஆண்டு 1013 பாலங்கள் தான் புனரமைக்கப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 37 சதவீதம் கூடுதலாகும். (கடந்த ஆண்டின் + 37%)

 

  • 2019 -2020 கால ஆண்டில் இதுவரை இல்லாத அளவு இரயில்வே தண்டவாளங்கள் அதிகபட்சமாக 5181 கி.மீ புதுப்பிக்கப்பட்டுள்ளன. 2018- 19கால ஆண்டில் 4,265 கி.மீ அளவில் தான் தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டது குறிப்பிட்தக்கது (கடந்த ஆண்டை விட + 20%).

 

  • ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) நிறுவனத்தில் இருந்து இந்த ஆண்டில் மிக உயர்ந்த தரமுள்ள தண்டவாளங்கள் (13.8 லட்சம் டன்) வழங்கப்பட்டன. 6.4 லட்சம் டன் நீளமான தண்டவாளங்களை வழங்குவதன் மூலம், வெல்டிங்கின் நோக்கம் வெகுவாகக் குறைந்து சொத்தின் சிறந்த நம்பகத்தன்மைக்கு வழிவகுத்தது.

 

  • 2019 -20 கால ஆண்டில் மொத்தம் 285 லெவல் கிராஸிங்குகள் (L.C) ஒட்டுமொத்தமாக சமிக்ஞைகளால் வலுவாகப் பின்னிப்பிணைந்து இணைக்கப்பட்டுள்ளன, ஒட்டுமொத்தமாகவ்வாறு இணைக்கப்பட்ட லெவல் கிராசிங்குகள் 11,639 ஆகும்.

 

  • பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, 2019-20ஆம் ஆண்டில் இயந்திர சமிக்ஞையுடன் இயங்கிய 84 நிலையங்கள் மின்சார / மின்னணு சமிக்ஞையுடன் இயங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளன.

மேற்சொன்னவை அனைத்தும் 2017-18ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ராஷ்டிரிய ரெயில் சன்ரக்ஷா கோஷ் (ஆர்.ஆர்.எஸ்.கே) திட்டத்தின் மூலம் வருடம் 20,000 கோடி ரூபாய் அளவில் அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ .1 லட்சம் கோடி செலவழிக்கப்படலாம். இந்த நிதியின் மூலம்,  இயற்கைப் பேரிடர் காலங்களிலும் மிக முக்கியமான பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள முடிந்ததால், முடிவுகள் தெளிவாக உள்ளன.

*******



(Release ID: 1630286) Visitor Counter : 254