சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
BS-6 மாசு நெறிமுறைகளுடன் வெளிவரும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தனித்துவமான வண்ணங்கள் கொண்ட இலக்கத்தகடு (நம்பர் ப்ளேட்) பொருத்த முடிவு.
Posted On:
08 JUN 2020 4:45PM by PIB Chennai
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் S.O. 1979 (இ) ஜூன் 5, 2020 தேதியிட்ட உத்தரவில். எந்த எரிபொருள் வகையினதும் BS -6 மாசுக் கட்டுபாட்டு நெறிமுறை வாகனங்களுக்கான பதிவு விவரங்களை எடுத்துச் செல்லும் தற்போதைய ஸ்டிக்கரின் மேல் 1 செ.மீ அகலமுள்ள பச்சை நிறத்துண்டு ஒன்றைக் கட்டாயமாக்குகிறது, அதாவது பெட்ரோல் அல்லது இயற்கை எரிவாயு (CNG)வில் இயங்கும் வாகனங்களுக்கு வெளிர் நீல வண்ண ஸ்டிக்கர் மற்றும் டீசல் வாகனம் ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும். இப்போது BS – 6 வாகனங்களில் இந்த ஸ்டிக்கர்கள் மீது 1 செ.மீ மேலே பச்சை நிறத் துண்டு இருப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
BS-6 மாசு கட்டுப்பாடுத் தரநிலைகள் ஏப்ரல் 1, 2020 முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன, இதன் மூலம் கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை வழங்குகின்றது மற்றும் இது உலகெங்கிலும் பின்பற்றப்படும் மாசுக் கட்டுப்பாடுத் தரங்களுக்கு இணையாக இருக்கிறது. பிற நாடுகளில் பின்பற்றப்படும் மாசுக் கட்டுப்பாடுத் தரத்திற்கான வாகனங்களை இப்படி தனித்தனியாக அடையாளம் காண்பது குறித்து அரசாங்கத்திடம் கோரப்பட்டதைத் தொடர்ந்து அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது.
********
(Release ID: 1630275)
Visitor Counter : 285