அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கொவிட்-19 தொடர்பான உடல்நலன் மற்றும் அபாயம் தகவல் தொடர்பு திட்டம் பற்றிய கையேடு வெளியீடு
Posted On:
08 JUN 2020 1:31PM by PIB Chennai
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் தொழில்நுட்பத் தகவல்தொடர்பு குழுமம், கொவிட்-19 தொடர்பான உடல்நலன் மற்றும் அபாயம் தகவல்தொடர்புத் திட்டம் குறித்த கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. “கொவிட்-19-ல் கவனம் செலுத்தும் அறிவியல் மற்றும் சுகாதார விழிப்புணர்வு ஆண்டு” (யாஷ்) என்ற தலைப்பிலான இந்தக் கையேட்டில், கொவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் அபாயங்கள், சிக்கல்கள், பேரிடர்கள் மற்றும் நிலையற்ற தன்மை ஆகியவற்றுக்கு தீர்வு காணும் மிகப் பெரிய திட்டத்தின் அவசியம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், நிகழ்காலம் மற்றும் எதிர்கால சவால்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், அறிவியல் மற்றும் சுகாதார விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களின் புரிதலை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
அடிமட்ட அளவில், கொவிட்-19 குறித்து சுவாரஸ்யமான மற்றும் உண்மையான தகவல்களை அளிப்பதற்காக, கொவிட்-19 தொற்றில் கவனம் செலுத்தும் ஒருங்கிணைந்த உடல் நலன் மற்றும் அபாயம் குறித்த தகவல் தொடர்புத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. மென்பொருள் / உள்ளடக்கம் உருவாக்கம், திறன்மேம்பாடு, தகவல் பரவல் ஆகிய மூன்று அம்சங்களுடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் கையேட்டை கீழ்காணும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்: www.dst.gov.in
-----
(Release ID: 1630204)
Visitor Counter : 255