நிதி அமைச்சகம்

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.36,400 கோடியை விடுவித்தது மத்திய அரசு

Posted On: 04 JUN 2020 8:28PM by PIB Chennai

சட்டப்பேரவையுடன் கூடிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு டிசம்பர் 2019 முதல் பிப்ரவரி 2020 வரையான காலத்துக்கு சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடாக ரூ.36,400 கோடியை மத்திய அரசு இன்று விடுவித்துள்ளது. கோவிட்-19 தொற்று பரவும் நிலையில், மாநில அரசுகளின் நிதிஆதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், செலவுகளை மாநில அரசுகள் சமாளிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையுடன் கூடிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு 2019-ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையான காலத்துக்கு சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடாக ரூ.1,15,096 கோடியை மத்திய அரசு ஏற்கனவே விடுவித்துள்ளது.



(Release ID: 1629573) Visitor Counter : 181