பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
உலகளவிலான எரிசக்தி நிலைத்தன்மையை ஏற்படுத்த பொறுப்பான நடவடிக்கைகள் எடுக்கும்படி ஒபெக் (OPEC) தலைமைச் செயலாளருக்கு திரு தரமேந்திர பிரதான் வேண்டுகோள்
प्रविष्टि तिथि:
04 JUN 2020 3:42PM by PIB Chennai
பெட்ரோல் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் (OPEC) தலைமைச் செயலாளர் எச்.இ.டாக்டர் முகமது பர்கின்டோவுடன் காணொளிக் காட்சி மூலம் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தினார். சர்வதேச எரிசக்திச் சந்தையில் தற்போதைய நிலவரம்,கோவிட்-19 தொற்றுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள கூட்டம் குறித்து இந்த ஆலோசனை நடந்தது.
உலகளவிலான பொருளாதார மந்த நிலையை வரும் நாட்களில் புதுப்பிக்க, பெட்ரோலிய உற்பத்தி மற்றும் நுகர்வு நாடுகள் எடுக்க வேண்டிய பொறுப்பான நடவடிக்கைகளை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் வலியுறுத்தினார். பெட்ரோலிய சந்தையை நிலைப்படுத்துவதில் ஒபெக் அமைப்பின் பங்கு பற்றி வலியுறுத்திய அவர், இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்புக்காக ஒபெக் நாடுகளுடன் இணைந்து செயல்படவும் ஒப்புக்கொண்டார். மேலும், தற்போதைய சவாலான சூழ்நிலையில் உலக எரிசக்தி நிலைத்தன்மைக்கு இணைந்து செயல்படவும் ஒப்புக்கொண்டார். தொற்றை எதிரகொள்ள இந்தியா எடுத்த முயற்சிகள், இந்தியாவின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை திரு பர்கின்டோ பாராட்டினார்.
(रिलीज़ आईडी: 1629396)
आगंतुक पटल : 290