பாதுகாப்பு அமைச்சகம்

பிரெஞ்சு ஆயுதப்படை அமைச்சருடன் பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் உரையாடினார்.

प्रविष्टि तिथि: 02 JUN 2020 2:26PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், இன்று பிரான்சு நாட்டின் ஆயுதப்படைகள் அமைச்சர் திருமிகு. பிளாரன்ஸ் பார்லியுடன் தொலைபேசி மூலம் உரையாடினார். கொவிட்-19 நிலவரம் உள்பட பரஸ்பரம் தொடர்புடைய விஷயங்கள், பிராந்திய பாதுகாப்பு குறித்து இருவரும் விவாதித்தனர். இந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையே, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த அவர்கள் இசைவு தெரிவித்தனர். கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியா, பிரான்ஸ் ஆயுதப்படையினர் மேற்கொண்ட முயற்சிகளை இரு அமைச்சர்களும் பாராட்டினர்.

கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு இடையே, ரபேல் விமானங்களை உரிய காலத்தில் வழங்க உறுதி பூண்டுள்ளதாக பிரான்ஸ் மீண்டும் உறுதியளித்துள்ளது.

2020 முதல் 2022 வரை இந்தியப் பெருங்கடல் கடற்படை அமைப்புக்கு பிரான்சின் தலைமைப் பொறுப்பை பாதுகாப்பு அமைச்சர் வரவேற்றார். இந்தியப் பெருங்கடல் மண்டலம் 2018 குறித்த இந்தியா- பிரான்ஸ் கூட்டுப் பாதுகாப்புத் தொலைநோக்கை நிறைவேற்றப் பாடுபடுவது என இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.


(रिलीज़ आईडी: 1628719) आगंतुक पटल : 293
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Odia , Telugu , Kannada , Kannada , Malayalam