மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

தகுந்த தொழில்நுட்ப மூலதனம், அந்நிய நேரடி முதலீடு, மிகச் சிறந்த மனித ஆற்றல் ஆகியவற்றுடன் இந்தியா, உலகின் முக்கிய நாடாக உலக பொருளாதாரத்திற்கு கணிசமான பங்காற்றுகிறது: ரவி ஷங்கர் பிரசாத்.

Posted On: 02 JUN 2020 1:01PM by PIB Chennai

டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என்பது போன்ற பல சீர்திருத்தத் திட்டங்களில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த முயற்சிகள், சாதாரண குடிமக்களுக்கும் அதிகாரம் வழங்கி, அவர்களும் டிஜிட்டல் பயன்பாட்டிற்கு வர உதவி செய்துள்ளது. புதுமைகளையும், தொழில் முனைவோரையும் ஊக்குவித்துள்ளது. இந்தியாவின் நிலையை உலக அரங்கில், உலக அளவிலான டிஜிட்டல் சக்தியாக உயர்த்தியுள்ளது.

 

மின்னணு உற்பத்தியை ஊக்குவிப்பது என்பது இந்தியாவில் தயாரிப்போம் - மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். மின்னணு பற்றிய தேசியக் கொள்கை 2019;  திருத்திமைக்கப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகைத் திட்டம் (MSIPS);   மின்னணு உற்பத்தித் தொகுப்புகள்; மின்னணு மேம்பாட்டு நிதியம் போன்ற முயற்சிகளின் காரணமாக இந்தியாவின் மின்னணு உற்பத்தி 2014ஆம் ஆண்டில் இருந்த 29 பில்லியன் USD என்பதிலிருந்து 2019 ஆம் ஆண்டில் 70 பில்லியன் USD யாக அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் குறிப்பாக அலைபேசி உற்பத்தி வளர்ச்சி, மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. 2014ஆம் ஆண்டில் இரண்டு அலைபேசி தயாரிப்புத் தொழிற்சாலைகளே இருந்தன. தற்போது தொலைபேசி தயாரிக்கும் நாடுகளில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. அலைபேசி உற்பத்தி 2018- 19 ஆம் ஆண்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 29 கோடி யூனிட்டுகள் ஆக இருந்தது 2014ஆம் ஆண்டில் 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு கோடி யூனிட்டுகள் தயாரிக்கப்பட்டிருந்தன. மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி 2014- 15 ஆம் ஆண்டில் 38263 கோடி ரூபாயாக இருந்தது இது 2018 - 19 ஆம் ஆண்டில் 61908 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. உலக அளவில் மொத்த மின்னணு உற்பத்தியில், இந்தியாவின் பங்கு 2018 ஆம் ஆண்டு 3 சதவீதத்தை எட்டியது. 2012ஆம் ஆண்டில் இது 1.3 சதவிகிதமாக இருந்தது.

 

ஆத்மநிர்பார் பாரத் - சுயசார்பு இந்தியா என்ற திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார். இந்தியா தனித்து நிற்கவேண்டும் என்பது இதன் பொருள் அல்ல. தகுந்த தொழில் நுட்பம் அந்நிய நேரடி முதலீடு உட்பட மூலதனம், அசாதாரணமான மிகச் சிறந்த மனித ஆற்றல் ஆகிய அனைத்தையும் கொண்டு, இந்தியா உலகப் பொருளாதாரத்திற்கு கணிசமான அளவு பங்காற்ற வேண்டும் என்பதே இதன் பொருள் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு.ரவி ங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

 

உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு சொத்தாக அமையும் வகையில், அனைத்து மதிப்புத் தொடர்களிலும் வலுவான உற்பத்திச் சூழலைக் கட்டமைத்து, அவற்றை உலக அளவிலான மதிப்புத் தொடர்களுடன் ஒருங்கிணைப்பது குறித்து கவனத்தில் கொண்டுள்ளோம். i) உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்புத் திட்டம்  (PLI); ii) பெரிய அளவிலான மின் உற்பத்தி மின்னணு உபகரணங்கள் செமி கண்டக்டர்கள் தயாரிப்பதை ஊக்குவிப்பது (SPECS) ; iii) திருத்திமைக்கப்பட்ட மின்னணு உற்பத்தித் தொகுப்பு (EMC 2.0) திட்டம் ஆகியவற்றின் சாரம் இதுவே.

 

இந்த முப்பெரும்  திட்டங்களுக்காக 50,000 கோடி ரூபாய் (சுமார் 7 பில்லியன் USD) ஒதுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மின்னணு உற்பத்திக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, நாட்டில் மின்னணு உற்பத்திச் சூழலை வலுவாக்க இத்திட்டங்கள் உதவும்.


(Release ID: 1628716) Visitor Counter : 407