ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையின் செயலாளராக ஆர்.கே. சதுர்வேதி பொறுப்பேற்பு.

प्रविष्टि तिथि: 01 JUN 2020 3:57PM by PIB Chennai

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, 1987ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவைச் சேர்ந்த திரு ஆர்.கே. சதுர்வேதி, மத்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்,  ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையின் செயலாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு அவர் கலாச்சார அமைச்சகத்தில் கூடுதல் செயலர் மற்றும் நிதி ஆலோசகராகp பணியாற்றி வந்தார். மத்திய கல்வி வாரியத் தலைவராகவும், தேசிய தொழில் திறன் மேம்பாட்டு ஆணையத்தின் (NSDA) தலைமை இயக்குநராகவும் இவர் இருந்துள்ளார்.

 

இதுவரை அப் பதவியில் இருந்த திரு பி. ராகவேந்திர ராவ், 2020 மே 31 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றதை அடுத்து, திரு சதுர்வேதி நியமிக்கப் பட்டுள்ளார்.


(रिलीज़ आईडी: 1628412) आगंतुक पटल : 338
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Odia , Telugu