சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் கடந்த ஆறு ஆண்டுகளாக அடைந்த சாதனைகளையும், மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் கொண்ட விளக்கப்படத்தை வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
31 MAY 2020 5:05PM by PIB Chennai
மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் கடந்த ஆறு ஆண்டுகளாக அடைந்த சாதனைகளையும், மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் கொண்ட விளக்கப்படத்தை வெளியிட்டுள்ளது
மே 31, 2020
மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் கடந்த ஆறு ஆண்டுகளாக அடைந்த சாதனைகளையும், மேற்கொண்ட முயற்சிகளையும் எடுத்துக் கூறும் வகையிலான ஆங்கில மொழியில் ஐந்து விளக்கப்படங்களையும், இந்தி மொழியில் ஐந்து விளக்கப்படங்களையும் வெளியிட்டுள்ளது. சமூக ஊடக வலைதளங்களில் வெளியிடுவதற்கு ஏற்ற வகையிலான இந்த விளக்கப்படங்கள், நாட்டில் சிறுபான்மையினர் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட ஏறக்குறைய அனைத்துத் திட்டங்களையும் எடுத்துக் கூறும் வகையில் ஐந்து தலைப்புகளில் / பொருள்களில் உள்ளன.
- திறன் மேம்பாடு, வேலை, வேலைவாய்ப்பு
- ஹுனார் ஹாட்: கலைஞர்கள், கைவினைஞர்கள், சமையற்கலை நிபுணர்கள், ஆகியோருக்கான வாய்ப்பு - குறிப்பாகப் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து சிறப்பு கவனம்.
- பிரதமர் ஜன் விகாஸ் கார்யகிரம்: (PMJVK) நாட்டில் சிறுபான்மையினர் அதிகமாக உள்ள இடங்களில் சமூகப் பொருளாதாரக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்துகிறது.
- கல்வி அதிகாரம்
- வக்ஃபு சொத்துகளைப் பயன்படுத்துவது: நாடுமுழுவதும் உள்ள வக்ஃபு சொத்துக்களை ஜியோ டேக்கிங் செய்தல்; மற்றும் கணினி மயமாக்குதல்; இதன்மூலம் சொத்துக்கள் சமுதாய நலனுக்காக பயன்படுவதை உறுதி செய்தல்.
இந்த விளக்கப்படங்கள் சித்திரங்கள், புகைப்படங்கள், எழுத்துப்பூர்வமான விளக்கம் ஆகிய அனைத்தையும் கொண்டு, சிறந்த பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
விளக்கப்படங்களைக் காண இங்கே சொடுக்கவும் ஆங்கிலத்திற்கு English ஹிந்திக்கு Hindi
-----
(रिलीज़ आईडी: 1628258)
आगंतुक पटल : 236