ஆயுஷ்
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதம மந்திரி ”என் வாழ்க்கை என் யோகா” என்ற வீடியோ பிளாக்கிங் போட்டியை அறிவித்து உள்ளார்
Posted On:
31 MAY 2020 5:46PM by PIB Chennai
இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது மாதாந்திர மனதின் குரல் நிகழ்ச்சியின் போது ஆற்றிய உரையில் அனைவரையும் ”என் வாழ்க்கை – என் யோகா” (ஜீவன் யோகா என்றும் அழைக்கப்படும்) என்ற வீடியோ பிளாக்கிங் போட்டியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் போட்டியை ஆயுஷ் அமைச்சகமும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான குழுமமும் (ICCR) இணைந்து நடத்துகின்றன. தனிநபர்களின் வாழ்க்கையில் யோகா எந்த மாதிரியான உருமாற்றத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் இந்தப் போட்டி கவனம் செலுத்துகிறது. வருகின்ற 21 ஜுன் 2020 அன்று கடைபிடிக்க இருக்கும் ஆறாவது சர்வதேச யோகா தினத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த போட்டி அமைகிறது. ஆயுஷ் அமைச்சகத்தின் சமூக ஊடக ஹேண்டில்களில் இன்று அதாவது 31 மே 2020 முதல் இந்த போட்டி குறித்து நேரடியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
இளம் வயதினர் (18 வயதிற்கு குறைவானவர்கள்), பெரியவர்கள் (18 வயதிற்கு மேற்பட்டவர்கள்) மற்றும் யோகா நிபுணர்கள் என்ற மூன்று பிரிவுகளின் கீழும் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் தனித்தனியாக பங்கேற்று தங்களின் வீடியோவைச் சமர்ப்பிக்கலாம். மொத்தத்தில் இந்தப் போட்டியானது 6 பிரிவுகளின் கீழ் நடைபெறுகிறது. இந்திய போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் வரிசையின் கீழ் முதல் பரிசாக ரூ. 1லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.50,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்படும். இந்தப் போட்டிக்கான சர்வதேச பரிசுகள் விரைவில் ஆயுஷ் அமைச்சகத்தின் யோகா போர்ட்டலில் அறிவிக்கப்படும்.
இந்தப் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து யார் வேண்டுமென்றாலும் பங்கேற்கலாம். போட்டியில் கலந்து கொள்வதற்கு பங்கேற்பாளர்கள் 3 யோகப் பயிற்சிகள் குறித்த (கிரியா, ஆசனம், பிராணாயாமம், பந்தா அல்லது முந்திரை) 3 நிமிட வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனோடு இந்த யோகப் பயிற்சிகள் தங்கள் வாழ்வில் எந்தவிதமான பலன்களை அளித்துள்ளன என்ற செய்தி / விவரணையை வீடியோவாக இணைக்க வேண்டும். இந்த வீடியோவை #MyLifeMyYogaINDIA என்ற போட்டிக்கான ஹேஷ்டேக் மற்றும் எந்தப் போட்டிப் பிரிவின் கீழ் சமர்ப்பிக்கிறார்களோ அந்தப் பிரிவிற்குப் பொருத்தமான ஹேஷ்டேக்குடன் முகநூல், டுவிட்டர் அல்லது இஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யலாம். போட்டியில் பங்கேற்பது குறித்த விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை ஆயுஷ் அமைச்சகத்தின் யோகா போர்ட்டலில் தெரிந்து கொள்ளலாம் (https://yoga.ayush.gov.in/yoga/).
பிரதம மந்திரியின் இந்தப் போட்டி குறித்த அறிவிப்பானது மக்களிடையே பெருமளவில் ஆர்வத்தையும் பங்கேற்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆர்வம் குறிப்பிடத்தக்க அளவு பொதுசுகாதார நற்பயன்களை ஏற்படுத்தும் விதமாக மாற்றப்படும் என்ற நம்பிக்கையை ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று கால சூழலின் பல்வேறு அம்சங்களில் யோகாவானது சாதகமான பலனை ஏற்படுத்தி உள்ளதை இப்பொழுது பலரும் ஏற்றுக் கொண்டு உள்ளனர்.
------
(Release ID: 1628249)
Visitor Counter : 267
Read this release in:
Punjabi
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Odia
,
Kannada