அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தேசிய ஆய்வுக்கூடங்கள், பல்கலைக்கழகங்களில் கோவிட்-19 பரிசோதனை மையங்களை (மையம்-தொகுப்பு மாதிரியில்) அதிகரித்தல்.

Posted On: 30 MAY 2020 2:57PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள அரசு அமைப்புகளில் கோவிட்- 19 மாதிரிப் பரிசோதனைகளை அதிகப்படுத்துவதற்காக மையம் மற்றும் தொகுப்பு ( ப் அண்ட் ஸ்போக்) என்ற வர்த்தக மாதிரியின் அடிப்படையில், நாடு முழுவதும் நகர மண்டலத் தொகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

அந்தந்த அமைச்சகங்கள்/ துறைகளால் (DBT, DST, CSIR, DAE, DRDO, ICAR etc)  இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக விதிமுறைப்படி அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆய்வுக்கூடங்கள் பரிசோதனை மையங்களாகச் செயல்படும். இதுவரை சென்னை உட்பட 19 இடங்களில் நகரங்கள்/மண்டலத் தொகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

சுமார் நூறு அமைப்புகள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஏழு DBT தன்னாட்சி அமைப்புகள் மையங்களாக செயல்பட ICMR அங்கீகாரம் வழங்கியுள்ளது. கோவிட்-19 நோய் கண்டறிவதற்கான பரிசோதனைகளை (RGCB, THSTI, ILS, inStem, NCCS, CDFD, NIBMG) இவை செய்துவருகின்றன.

 

அந்தந்த நகரங்கள்/மண்டலங்கள் ஆகியவற்றில் இவை மையங்களாக செயல்பட்டு பிற மத்திய மாநில அரசு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து முயற்சிகளை மேற்கொள்கின்றன. அதுமட்டுமல்லாமல் அவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் நெருங்கிப் பணியாற்றி பரிசோதனை மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனை முடிவுகளை நாள்தோறும் ICMR அறிக்கையாக அளிக்கின்றன. நான்கு வார காலத்தில், மொத்தமாக இந்தத் தொகுப்புகள் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 70 ஆயிரம் பரிசோதனைகளைச் செய்துள்ளன. இந்தத் தொகுப்புகள் அடுத்த நான்கு வாரங்களில் 50 ஆக அதிகரிக்கப்படும். இதனால் நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள இடங்களிலும் பரிசோதனை வசதிகள் கிடைக்கும்

 



(Release ID: 1627928) Visitor Counter : 183