எரிசக்தி அமைச்சகம்

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும், இதர மருத்துவப் பணியாளர்களுக்கும் PFC உணவு வழங்கவுள்ளது.

Posted On: 27 MAY 2020 5:24PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மற்றும் ஒரு நடவடிக்கையாக மத்திய மின்துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான, இந்தியாவின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனமான, மின் நிதிக் கழக நிறுவனம் (PFC Ltd), கோவிட்-19 முன்னணி போராளிகளுக்கு சுகாதாரமான, சத்துக்கள் நிறைந்த உணவு வழங்குவதற்காக ஆசியாவின் மிகப்பெரிய உணவு நிறுவனமான TajSats நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. புதுதில்லியில் உள்ள டாக்டர். ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும், இதர மருத்துவப் பணியாளர்களுக்கும் PFC உணவு வழங்கவுள்ளது..

 

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக டாக்டர். ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்படும். 25 மே  2020 முதல் 60 நாட்களுக்கு நாள்தோறும் உயர்தர, சுகாதாரமான உணவுப் பொட்டலங்கள் வழங்குவதற்காக சுமார் 64 லட்சம் ரூபாய் நிதி உதவி PFC நிறுவனத்தால் TajSats நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.


(Release ID: 1627245) Visitor Counter : 277