ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளை ஈரானுக்கு அளிக்க எச்.ஐ.எல். (இந்தியா) நிறுவனம் தீவிரம்.
மத்திய பொதுப் பணித் துறையின் நன்மதிப்பு ரேட்டிங் BB-யில் இருந்து
BBB ஆக உயர்வு.
Posted On:
24 MAY 2020 1:59PM by PIB Chennai
கோவிட்-19 முடக்கநிலையால் ஏற்பட்டுள்ள மூலப் பொருள்கள் பிரச்சினை மற்றும் இதர சவால்களுக்கு மத்தியில், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ரசாயனங்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறையின் கீழ் செயல்படும் எச்.ஐ.எல். (இந்தியா) லிமிடெட் என்ற பொதுத் துறை நிறுவனம், உரிய காலத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை உற்பத்தி செய்து வேளாண்மை சமுதாயத்தினருக்கு அளிப்பதை உறுதி செய்துள்ளது.
எச்.ஐ.எல். நிறுவனம் இப்போது அரசுகளுக்கு இடையிலான ஏற்பாட்டின் கீழ் ஈரானுக்கு வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு வழங்குவதற்காக 25 MT அளவில் மாலதியான் டெக்னிக்கல் மருந்தை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஈரானுக்காக இதைத் தயாரித்து வழங்க வேண்டும் என்று எச்.ஐ.எல். நிறுவனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டிருந்தது.
இந்த மத்திய பொதுத் துறை நிறுவனத்தின் நன்மதிப்பு ரேட்டிங் நிலை BB என்பதில் இருந்து BBB ஆக உயர்ந்துள்ளது. இது ஸ்திரத்தன்மையான மூலதனத்திற்கான கிரேடு ஆகும்.
இந்த நிறுவனம் லத்தீன் அமெரிக்க நாடான பெரூவுக்கு 10 MT அளவுக்கு மன்கோஜெப் என்ற பூஞ்சைக்கொல்லி மருந்தை ஏற்றுமதி செய்துள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 12 MT அளவுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளது.
வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்காக மாலதியான் டெக்னிக்கல் மருந்தை ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு வழங்குவதற்கு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்துடன் எச்.ஐ.எல். ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. கடந்த வாரம் வரையில் இந்த நிறுவனம் 67 MT அளவுக்கு மாலதியான் டெக்னிக்கல் உற்பத்தி செய்து, வழங்கியுள்ளது.
டெங்கு மற்றும் சிக்குன்குனியா கட்டுப்பாட்டுக்காக மாநகராட்சிகளுக்கும் மாலதியான் டெக்னிக்கல் மருந்தை எச்.ஐ.எல். வழங்கியுள்ளது.
குடும்ப நலத் துறை அளித்த உத்தரவின்பேரில் NVBDCP திட்டங்களுக்காக ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு 314 MT அளவுக்கு DDT 50% wdp மருந்து அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் 252 MT அளவுக்கு மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
முடக்கநிலை அமல் காலத்தில் 2020 மே 15ஆம் தேதி வரையில் எச்.ஐ.எல். நிறுவனம் 120 MT அளவுக்கு மாலதியான் டெக்னிக்கல், 120.40 MT அளவுக்கு DDT டெக்னிக்கல், 288 MT அளவுக்கு DDDT 50%, 21 MT அளவுக்கு எச்.ஐ.எல். கோல்டு (நீரில் கரையக்கூடிய உரம்), ஏற்றுமதிக்காக 12 MT அளவுக்கு மான்கோஜெப் பூஞ்சான் கொல்லி, 35 MT அளவுக்கு மற்ற வேளாண் ரசாயன மருந்துகளைத் தயாரித்துள்ளது. வேளாண் சமுதாயத்தினரும், சுகாதாரத் துறையினரும் முடக்கநிலையால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக இவை தயாரிக்கப் பட்டுள்ளன.
*************
(Release ID: 1626567)
Visitor Counter : 399