பாதுகாப்பு அமைச்சகம்

மொரீசியஸ் நாட்டில் இந்திய மருந்துக் கப்பல்

Posted On: 23 MAY 2020 8:31PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மொரீசியஸ் நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் இந்தியக் கடற்படையின் கேசரி என்ற கப்பல், “சாகர இயக்கம்” (Mission Sagar) என்ற திட்டத்தின் கீழ் மருந்துகள், உபகரணங்கள் ஆகியவற்றைக் கொண்டு சென்று, போர்ட் லூயிஸ் மொரீசியஸ் துறைமுகத்தை 2020, மே 23ஆம் தேதி அடைந்தது.

கோவிட் தொற்றினைச் சமாளிப்பதற்காக நட்பு நாடுகளுக்கு இந்திய அரசு மருந்துகள், உபகரணங்கள், அத்தியாவசியப் பொருள்களை அளித்து உதவி வருகிறது. அதன்படி ஆயுர்வேத மருந்துகளை மொரீசியஸ் நாட்டுக்கு அனுப்பியுள்ளது.

இது தவிர, மொரீசியஸ் நாட்டு மருத்துவர்களுடன் இணைந்து மருத்துவப் பணி புரிவதற்காக இந்தியக் கடற்படையைச் சேர்ந்த 14 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழுவும் அக்கப்பலில் சென்று இறங்கியுள்ளது. இரு தரப்பினரும் இணைந்து கோவிட் தொற்று சார்ந்த அவசர மருத்துவப் பணிகளை மேற்கொள்வர். இந்தக் குழுவில் நுரையீரல் மருத்துவ நிபுணர் (pulmonologist), மயக்க மருந்து நிபுணர் (anesthesiologist) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த மருத்துவ உதவிப் பொருள்களை இந்திய அரசு சார்பில் மொரீசியஸ் நாட்டுக்கு வழங்குவதற்கான சம்பிரதாய நிகழ்ச்சி 2020, மே 23ஆம் தேதி மொரீசியஸ் நாட்டில் நடைபெற்றது. மொரீசியஸ் சார்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கைலேஷ் ஜகுத்பால் அவற்றைப் பெற்றுக் கொண்டார். இந்தியாவின் சார்பில் மொரீசியஸில் உள்ள இந்தியாவின் தூதர் திரு. தன்யமா லால் பங்கேற்றார். நிகழ்ச்சியின்போது இந்தியக் கடற்படையின் கேசரி கப்பலின் கமாண்டிங் ஆபிசர் முகேஷ் தயாளுடன் அமைச்சர் கைலேஷ் உரையாடினார்.

பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கடல் பாதுகாப்பு, மேம்பாடு என்ற தொலைநோக்குத் திட்டத்தின் ஓர் அங்கமாகசாகர இயக்கம்’ (Mission Sagar) இடம்பெற்றுள்ளது.

 

 



(Release ID: 1626561) Visitor Counter : 161