ரெயில்வே அமைச்சகம்
பதினைந்து சிறப்பு இணை ரயில்களுக்கான பயணச்சீட்டுகளைப் பதிவு செய்வதற்கான நிபந்தனைகளை இந்திய ரயில்வே திருத்தியமைத்துள்ளது.
प्रविष्टि तिथि:
22 MAY 2020 8:04PM by PIB Chennai
இந்திய ரயில்வே 12 5. 2020 முதல் பதினைந்து சிறப்பு ரயில்களை இயக்கி வருகின்றது. பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு இந்தப் பதினைந்து சிறப்பு இணை ரயில்களுக்கான பயணச் சீட்டுகளைப் பதிவு செய்து கொள்வதற்கான நிபந்தனைகளில் சிலவற்றை திருத்தியமைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அவை பின்வருமாறு:
இந்த ரயில்களுக்கான முன்பதிவுக் காலம் ஏழு நாட்களாக இருந்தது. இது 30 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்களுக்கு தத்கல் முன்பதிவு வசதி இருக்காது.
(RAC) ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கு எதிரான பதிவு/ காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணச்சீட்டுகள் ஆகியவை, இந்த ரயில்களுக்கு ஏற்கனவே உள்ள அறிவுரைகளின் படி வழங்கப்படும். காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் இந்த ரயில்களில் ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ரயில்கள் புறப்படும் நேரத்திற்கு குறைந்தபட்சம் நான்கு மணி நேரத்துக்கு முன்னதாக முதலாவது பட்டியல் (chart) தயாரிக்கப்படும்.. இரண்டாவது பட்டியல், ரயில் புறப்படும் நேரத்திற்கு, குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் முன்னதாகத் தயாரிக்கப்படும். (இதற்குமுன் 30 நிமிடத்துக்கு முன்னதாக இப்பட்டியல் தயாரிக்கப்படுவது வழக்கம்). முதல் மற்றும் இரண்டாவது பட்டியல் வெளியிடப்படும் இடைப்பட்ட காலத்தில் கரண்ட் புக்கிங் முன்பதிவு வசதி அனுமதிக்கப்படும்.
அஞ்சல் அலுவலகங்கள்,யாத்ரீகர்கள், பயணச்சீட்டு சுவிதா கேந்திரா உரிமம் பெற்றவர்கள் உட்பட கணினிமயமாக்கப்பட்ட அனைத்து பிஆர்எஸ் PRS கவுண்டர்கள் மூலமாகவும், ஐஆர்சிடிசி அங்கீகாரம் பெற்ற முகவர்கள் உட்பட பொது ஆன்லைன் முன்பதிவு சேவை மூலமாகவும், பொதுச் சேவை மையங்கள் மூலமாகவும் ஆன்லைன் முன்பதிவு செய்யும் வசதியும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
24 மே 2020 முதல் ரயில்களுக்கான முன்பதிவு செய்யப்படும் முன்பதிவிற்கும், 31 மே 2020 முதல் இயங்கக்கூடிய ரயில்களுக்கு முன் பதிவு செய்வதற்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ளா திருத்தியமைக்கப்பட்ட நிபந்தனைகள் பொருந்தும்.
***
(रिलीज़ आईडी: 1626375)
आगंतुक पटल : 269