சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவிட் 19 குறித்த அண்மைச் செய்திகள்
குணம் அடைபவர்கள் விகிதம் 40.98 சதவீதமாக உயர்வு
Posted On:
22 MAY 2020 6:45PM by PIB Chennai
முன்கூட்டியே எடுக்கப்பட்ட படிப்படியான, ஆக்கபூர்வ நடவடிக்கைகள் மூலமாக, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன், கோவிட்-19 நோயைத் தடுக்க, சூழ்நிலையைக் கையாள மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நடைமுறைகள் குறித்து அவ்வப்போது உயர்நிலை அளவில் ஆய்வு செய்து கண்காணிக்கப் படுகிறது.
நேற்றில் இருந்து கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6088 அதிகரித்துள்ளது. இப்போது நோய்த் தாக்குதல் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,18,447 ஆக உள்ளது. மருத்துவ கவனிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 66,330 ஆக உள்ளது.
இதுவரையில் 48,533 பேர் குணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3234 பேர் குணம் பெற்றுள்ளனர். இதன் மூலம், குணம் பெற்றவர்களின் அளவு 40.98 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாம் முடக்கநிலை 4.0 காலக்கட்டத்தில் இருக்கும் நிலையில், கோவிட் நோயை சமாளிக்கப் பழகுவதை நம் வாழ்க்கை முறையின் ஓர் அங்கமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியமானதாக உள்ளது. அடிக்கடி கை கழுவுதல், முகக் கவச உறைகள் பயன்படுத்துதல், `2 கெஜம் தூரத்தை' கடைபிடிக்க தனி நபர் இடைவெளியைப் பராமரித்தல், முதியவர்கள் மற்றும் நோய் எளிதில் தாக்கும் நிலையில் உள்ளவர்களின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது, ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து தனிப்பட்ட பாதுகாப்பை அதிகரித்துக் கொள்வது, ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது, அறிகுறிகள் இருந்தால் தயக்கம் எதுவும் இன்றி உரிய நேரத்தில் தெரிவித்து ஆரோக்கிய உதவி கோருதல் ஆகியவை இதில் அடங்கும்.
கோவிட்-19 தொடர்பான தகவல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் குறித்த ஆதாரப்பூர்வமான, சமீபத்திய தகவல்களை அறிந்து கொள்ள தயவுசெய்து பின்வரும் தொடர்புகளை அடிக்கடி பாருங்கள் : https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA
கோவிட்-19 தொடர்பான நுட்பமான விஷயங்களை அறிய technicalquery.covid19[at]gov[dot]in க்கு தகவல் அனுப்புங்கள். இதர தகவல்களை ncov2019[at]gov[dot]in மற்றும் @CovidIndiaSeva க்கு அனுப்புங்கள்.
கோவிட்-19 குறித்த ஏதும் தகவல்கள் அறிய விரும்பினால் சுகாதாரம், குடும்ப நல அமைச்சக தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுங்கள் : +91-11-23978046 அல்லது 1075 (கட்டணம் இல்லா தொலைபேசி). கோவிட்-19 குறித்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தகவல் மையங்களின் எண்கள் பின்வரும் இணையதள சுட்டியில் அளிக்கப் பட்டுள்ளன:
https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf .
****
(Release ID: 1626212)
Visitor Counter : 246