பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
நிறைவேற்றப்பட்டு வரும் செயல் திட்டங்களில் முக்கியமான அம்சமாக சுயசார்பு பாரதத் திட்டம் இருக்கும் என திரு.தர்மேந்திர பிரதான் உணர்த்தி உள்ளார்; தோராயமாக ரூ.8,000 கோடி மதிப்பிலான செயல்திட்டங்கள் மீளாய்வு
Posted On:
22 MAY 2020 1:46PM by PIB Chennai
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, எஃகுத்துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் தோராயமாக ரூ.8,000 கோடி மதிப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களால் பல நிலைகளில் நிறைவேற்றப்பட்டுவரும் செயல்திட்டங்களை மீளாய்வு செய்தார். சுயசார்பு பாரதம் என்ற திட்டத்தை (ஆத்மநிர்பார் பாரத்) சுட்டிக்காட்டிய அமைச்சர் பிரதான், இந்தச் செயல் திட்டங்களில் முழுமையாக உள்நாட்டுத் தற்சார்பைக் கடைபிடிக்குமாறு கூறி உள்ளார்.
800 கிமீ தூரத்திற்குக் குழாய் பதிப்பதற்கான பணியைச் சீராகத் தொடர்வதற்கு செப்டம்பர் 2020இல் சுமார் 1லட்சம் மெட்ரிக் டன் எஃகு கொள்முதல் செய்ய, ரூ.1000 கோடிக்கும் அதிகமான தொகையில் உள்நாட்டு ஏலம் கேட்போரிடம் இருந்து பெறப்பட்ட குழாய்த் தொடர் விலைப்புள்ளிகளை GAIL நிறுவனம் (Gas Authority of India Limited - GAIL) பரிசீலித்து வருகிறது. இந்தியாவில் தயாரியுங்கள் திட்டத்தின் முன்னெடுப்புகளுக்கு உந்துதல் தரும் வகையிலும், சுயசார்பு இந்தியா என்ற இலக்கை அடையவும், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் இந்த அளவானது இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரடங்குக்குப் பிறகு பிரதம மந்திரி உர்ஜா கங்கைத் திட்டத்தோடு சேர்ந்து, குழாய்த்தொடர் செயல்திட்டத்தை ஜக்திஸ்புர் – ஹால்தியா மற்றும் பொக்காரோ – தம்ரா குழாய் பதிக்கும் திட்டம் (Jagdishpur-Haldia and Bokaro-Dhamra Pipeline - JHBDPL) முழுவீச்சில் மீண்டும் தொடங்கியுள்ளது. நாட்டில் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை எரிவாயுவைக் குழாய் மூலம் எடுத்துச் செல்லும் பெருவழியில் கிழக்கு இந்தியாவை மேற்கு மற்றும் மத்திய பகுதியோடு இணைக்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் 1450 கிமீ தூரத்திற்கு இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் எடுத்துச்செல்லும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.6025 கோடி ஆகும். இந்தத் திட்டத்திற்காக தோராயமாக 1.65 லட்சம் மெட்ரிக் டன் ஸ்டீல் குழாய்கள் தயாரிக்கும் வாய்ப்புள்ளது. சுயசார்பு பாரதத்திட்டத்தின் கீழ் இதை இந்தியாவில் ரூ.2060 கோடி மதிப்பீட்டில் தயாரிக்க முடியும்.
(Release ID: 1626086)
Visitor Counter : 228
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam