எரிசக்தி அமைச்சகம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தொழிலுக்கு கூட்டு முயற்சி நிறுவனத்தை ஏற்படுத்த ஓஎன்ஜிசியுடன் என்டிபிசி புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 22 MAY 2020 12:37PM by PIB Chennai

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழிலுக்கு கூட்டு முயற்சி நிறுவனத்தை தொடங்க, மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் கார்பரேஷன் லிமிடெட் (NTPC), மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் (ONGC) ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழிலில் இரு நிறுவனங்களும் கால் பதிப்பதை அதிகரிக்க உதவும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் என்டிபிசி இயக்குனர் திரு ஏ.கே.குப்தா, மற்றும் ஓன்ஜிசி நிறுவனத்தின் நிதிப்பிரிவு இயக்குனரும் தொழில் மேம்பாடு மற்றும் கூட்டு முயற்சி பொறுப்பு அதிகாரியுமான திரு. சுபாஷ் குமார்  ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.  இந்த ஒப்பந்த நடவடிக்கை என்டிபிசி தலைமை நிர்வாக இயக்குனர் திரு. குர்தீப் சிங், ஓஎன்ஜிசி தலைமை நிர்வாக இயக்குனர் திரு ஷாஷி சங்கர் ஆகியோர் முன்னிலையிலும், இரு நிறுவனங்களின் இதர இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் காணொலிக் காட்சி மூலம் நடை பெற்றது.

இந்த ஒப்பந்தத்தின்படி, என்டிபிசி மற்றும் ஓஎன்ஜிசி ஆகியவை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கடலுக்குள் காற்றாலை மின்சக்தி கருவிகள் அமைப்பது மற்றும் இதர புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் அமைப்பது பற்றி ஆராயும். மேலும் நீடிப்புத்திறன், சேமிப்பு, இ-இயங்குதிறன், மற்றும் இஎஸ்ஜி (சூற்றுச்சூழல்-சமூகம்-நிர்வாகம்) தொடர்பான திட்டங்களில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் இந்த நிறுவனங்கள் ஆராயும்.

*****


(Release ID: 1626034) Visitor Counter : 245