பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு இதுவரை 6.8 கோடி இலவச சமையல் எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன

Posted On: 21 MAY 2020 2:52PM by PIB Chennai

கொவிட்-19 பொருளாதார நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மத்திய அரசு ஏழை எளியவர்கள் நலனுக்கான ‘’பிரதமர் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பு’’ திட்டத்தை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் 8 கோடி பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு 1.4.2020 முதல் 3 மாதங்களுக்கு இலவசமாக  சமையல் எரிவாயு உருளைகளை வழங்கி வருகிறது. 2020 ஏப்ரல் மாதத்தில், எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் பிரதமர் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு 453.02 லட்சம் உருளைகளை பிரதமர் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பின் கீழ் விநியோகித்துள்ளன. 20.5.2020 வரை, எண்ணெய் நிறுவனங்கள் பிரதமர் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு 679.92 லட்சம் உருளைகளை விநியோகித்துள்ளன. பயனாளிகளுக்கு அவர்களது வங்கிக்கணக்குகளில் நேரடிப் பயன் மாற்றம் மூலமாக முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்கள் இந்த வசதியைப் பெறுவதற்கு சிரமப்பட வேண்டியதிருக்காது. சமையல் எரிவாயு உருளை விநியோகிப்பதில் ஈடுபட்டிருக்கும் கொரோனா முன்களப் பணியாளர்கள் உரிய நேரத்தில் உருளைகளை விநியோகிப்பதுடன், பயனாளிகளிடையே, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், பல்வேறு சுகாதார விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.(Release ID: 1625820) Visitor Counter : 206