மத்திய அமைச்சரவை
இடம் பெயர்ந்தோர் / சிக்கித் தவிக்கும் இடம் பெயர்ந்தோருக்கு உணவு தானியங்களை ஒதுக்க சுய-சார்பு இந்தியா தொகுப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
Posted On:
20 MAY 2020 2:23PM by PIB Chennai
சுமார் 8 கோடி இடம் பெயர்ந்தோர் / சிக்கித் தவிக்கும் இடம் பெயர்ந்தோருக்கு, இரு மாதங்களுக்கு (மே மற்றும் ஜூன், 2020) இலவசமாக மாதத்துக்கு தலா 5 கிலோ உணவு தானியங்களை மத்தியத் தொகுப்பில் இருந்து வழங்குவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்தேதியிட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு உணவு மானியமாகத் தோராயமாக ரூ 2,982.27 கோடி தேவைப்படும். மேலும், மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து செலவு, கையாளும் செலவு, விற்பனையாளர் லாபம்/ கூடுதல் விற்பனையாளர் லாபம் ஆகியவற்றுக்குத் தேவைப்படும் ரூ 127.25 கோடியையும் மத்திய அரசே முழுவதும் ஏற்றுக் கொள்ளும். எனவே, இந்திய அரசின் மொத்த மானியம் ரூ 3,109.52 கோடி என மதிப்பிடப்படுகிறது.
கொவிட்-19 மூலமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலினால் பாதிக்கப்பட்டுள்ள இடம் பெயர்ந்தோர் / சிக்கித் தவிக்கும் இடம் பெயர்ந்தோரின் துன்பங்களை இந்த ஒதுக்கீடு குறைக்கும்.
***
(Release ID: 1625366)
Visitor Counter : 225
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam