உள்துறை அமைச்சகம்

வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை ரயிலில் அனுப்புவதற்கான நிலையான செயல் நடைமுறை(SOP)

Posted On: 19 MAY 2020 1:14PM by PIB Chennai

முடக்கால நடவடிக்கைகள் மீதான ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்கள் தொடர்ந்து மாற்றியமைக்கப்படுகின்றன. 17.05.2020ம் தேதி வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிகளை அடுத்து,  வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை ரயிலில் அனுப்புவதற்கான நிலையான செயல் நடைமுறையை(SOP) மத்திய உள்துறை அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது.

இந்த நிலையான செயல் நடைமுறை, வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை ரயில் மூலம் அனுப்ப கீழ்கண்டபடி அனுமதிக்கிறது:

  • ஷ்ரமிக் சிறப்பு ரயில்களை இயக்குவதை மத்திய உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசித்து ரயில்வேத்துறை அமைச்சகம் அனுமதிக்க வேண்டும்.
  • வெளிமாநில தொழிலாளர்களை அனுப்புவதிலும், வரவேற்பதிலும் தேவையான ஏற்பாடுகளை செய்ய திட்ட அதிகாரிகளை அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் நியமிக்க வேண்டும்.
  • மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தேவைகள் அடிப்படையில், புறப்பாடு மற்றும் நிறுத்தம் உள்ளிட்ட ரயில் பயணத் திட்டங்கள், ரயில்வேத்துறை அமைச்சகத்தால் இறுதி செய்யப்படும். இந்த விவரங்களை, வெளி மாநிலத் தொழிலாளர்களை அனுப்புவதற்கும், வரவேற்பதற்குமான ஏற்பாடுகளை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் செய்வதற்கு வசதியாக ரெயில்வே அமைச்சகம் அவர்களுக்கு தெரிவிக்கும்.
  • ரயில் பயணத் திட்டத்தை வெளியிடுதல், பயணிகளுக்கான நடைமுறைகள், ரயில்களில் வழங்கப்படும் சேவைகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ரயில் டிக்கெட் பதிவிற்கான ஏற்பாடு ஆகியவற்றை ரயில்வேத்துறை அமைச்சகம் செய்யும்.
  •  அனைத்து பயணிகளையும் கட்டாயம் பரிசோதித்து, தொற்று அறிகுறி இல்லாத பயணிகள் ரயில்களில் ஏறுவதை, வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்யும்.
  • ரயிலில் ஏறும்போதும், பயணத்தின்போதும், அனைத்துப் பயணிகளும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
  • போய் சேரும் இடத்தை அடைந்தபின், அந்தந்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் வகுத்துள்ள சுகாதார நடைமுறைகளை பயணிகள் பின்பற்ற வேண்டும்.

மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் எழுதியுள்ள கடிதம்: http://pibphoto.nic.in/documents/Others/2020519mha%20order221.pdf



(Release ID: 1625087) Visitor Counter : 205