பாதுகாப்பு அமைச்சகம்
சமுத்திர சேது திட்டம் இரண்டாம் கட்டம் ஐஎன்எஸ் ஜலஷ்வா, இந்திய குடிமக்களை ஏற்றிக்கொண்டு மாலேயிலிருந்து புறப்பட்டது.
प्रविष्टि तिथि:
16 MAY 2020 11:25AM by PIB Chennai
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் நம்நாட்டுக் குடிமக்களை, கடல் வழியாகத் தாயகம் அழைத்து வருவதற்காக இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தியக் கடற்படை, ஆப்பரேஷன் சமுத்திரசேது என்ற திட்டத்தின்படி இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பலில், மாலத்தீவின் மாலே துறைமுகத்தில் 2020, மே 15 அன்று 588 இந்திய குடிமக்களை கப்பலில் ஏற்றிக் கொண்டது. இந்த 588 பயணிகளில் கருவுற்ற ஆறு பெண்களும், 21 குழந்தைகளும் உள்ளனர்.
முப்பது நாற்பது நாட் (Knot) அளவில் மாலேயில் மழையும், காற்றும் இருந்த போதிலும் கப்பல் பணியாளர்கள் துணிந்து செயல்பட்டு, இந்தப் பயணிகளுக்கான அனைத்து நடைமுறைகளையும் செய்து முடித்தனர். எல்லா நேரங்களிலும் பாதுகாப்பு மற்றும் மருத்துவ நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டன. பயணிகளை ஏற்றுவதற்கு முன் கப்பலிலேயே பல பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்ததன. இவை உட்பட பயணிகளை கப்பலில் ஏற்றுக்கொள்ளும் முறைகளில் திட்டமிடப்பட்டபடி நடைமுறைப்படுத்துவதில், மோசமான வானிலை காரணமாக பல இடையூறுகள் ஏற்பட்டன.
கப்பல் கொச்சியை வந்தடைவதற்காக, இன்று காலை மாலேயிலிருந்து புறப்பட்டது.
(रिलीज़ आईडी: 1624382)
आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Punjabi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam