பிரதமர் அலுவலகம்

சுயசார்பு பாரதத்துக்காக, பிரதமர் மோடி தெளிவான அழைப்பு விடுத்துள்ளார்.


பிரதமர் சிறப்பு பொருளாதார திட்டத்தை அறிவித்துள்ளார். இது 20 லட்சம் கோடி தொகுப்பு நிதி கொண்டது.

மொத்த தொகுப்பு நிதி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு நிகரானது.

சுயசார்பு இந்தியாவுக்காக பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக ஐந்து திட்டங்களை அவர் அறிவித்துள்ளார்.

எல்லா துறைகளிலும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அது நாட்டை சுயசார்பு பாதைக்கு அழைத்து செல்லும் – பிரதமர்

உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து, அதை சர்வதேசத்துக்கு கொண்டுசெல்லும் நேரம் இது : பிரதமர்

Posted On: 12 MAY 2020 8:45PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். இந்த கொள்ளைநோய்க்கு எதிராக போராடி உயிர் நீத்தவர்களை பிரதமர் நினைவு கூர்ந்தார். கோவிட் 19 ஆல் ஏற்பட்டுள்ள பிரச்சினை எதிர்பார்க்காதது. ஆனால், இந்த போராட்டத்தில் நாம்  நம்மை பாதுகாப்பதுடன் மட்டுமின்றி, முன்னோக்கி செல்ல வேண்டியதும் அவசியமாக உள்ளது என்று அவர் கூறினார்..

 

சுயசார்பு இந்தியா

கோவிட்டுக்கு முந்தைய உலகத்தின் நிலை மற்றும் இப்போதைய நிலை குறித்து பேசிய பிரதமர் மோடி, 21ம் நூற்றாண்டை இந்தியாவுக்கானதாக மாற்றும் கனவை நனவாக்குவதற்கு, நாடு சுயசார்பு தன்மை கொண்டதாக மாறுவதை உறுதி செய்வதே முன்னேற்றத்துக்கான வழி என்றார். ஒரு பிரச்சினையை நமக்கான வாய்ப்பாக மாற்றுவது குறித்து பிரதமர் பேசுகையில், பிபிஇ கிட்டுகள் மற்றும் என்-95 முகக்கவசங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டினார். இந்தியாவில் இவற்றின் உற்பத்தி மிகக்குறைவாக உள்ள நிலையில் இருந்த நிலையில், தற்போது நாளொன்றுக்கு 2 லட்சம் வரையில் தயாரிக்கப்படுவதாக கூறினார்.

சுயசார்பு வரையறை என்பது, தற்போதைய உலகமயமாகிவிட்ட உலகத்தில் ஒரு மாற்றத்தை கண்டுள்ளது என்பதை பிரதமர் குறிப்பிட்டார். மேலும் சுயசார்பு தன்மை குறித்து நாடு பேசுவதையும் தெளிவுப்படுத்தினார். அதாவது சுயசார்பு என்பது சுயநலத்தில் இருந்து வேறுபட்டது என்று அவர் கூறினார். இந்தியாவின் கலாச்சாரமானது, உலகத்தை ஒரு குடும்பமாக கருதுவாகும். மேலும், இந்தியாவின் வளர்ச்சி என்பது, ஒட்டுமொத்த உலகத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஒரு பகுதியாகும். ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு இந்தியா பெரும் பங்கு அளிக்கும் என்று உலகம் நம்பிக்கை கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

சுயசார்பு இந்தியாவுக்கு ஐந்து தூண்கள்

நிலநடுக்கம் ஏற்பட்டு கட்ச் பகுதி பேரழிவு கண்டதை நினைவு கூர்ந்த பிரதமர், தன்னம்பிக்கையுடனும், தீர்மானத்துடன் இருந்ததால், அந்த பகுதி மீண்டும் தன் சொந்த காலில் நிற்க ஆரம்பித்தது என்றார். அதேபோன்ற ஒரு தீர்மானம், நாடு சுயசார்பை அடைய தேவைப்படுகிறது என்றார்.

இந்தியா தன்னம்பிக்கையுடன் ஐந்து தூண்களில் நிற்க முடியும் என்று பிரதமர் கூறினார். பொருளாதாரம், அபரிமிதமான வளர்ச்சியை கொண்டு வரும், மேலும், தொடர் மாற்றத்தை தடுக்காது. உள்கட்டமைப்பு, இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும். சிஸ்டம், 21ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தை அடிப்டையாக கொண்டு அமைந்துள்ளது. வளமான நிலபரப்பு, நமது சுயசார்பு இந்தியாவுக்கு மிகப்பெரிய வளத்துக்கான ஆதாரமாக இருக்கும்.  தேவை, நமது தேவையின் சக்தி மற்றும் விநியோக சங்கிலித் தொடரானது முழு திறனையும் உபயோகப்படுத்தும் அளவுக்கு இருக்கும். விநியோக சங்கிலித் தொடரை அதிகரிக்கவும், அதேசமயம் தேவையை பூர்த்தி செய்யவும், இதில் தொடர்புடைய ஒவ்வொருவரையும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

ஆத்மாநிர்பார் பாரத் அபியான்

ஆத்மாநிர்பார் பாரத்துக்கு (சுயசார்பு இந்தியா) அழைப்பு விடுத்த பிரதமர், சிறப்பு பொருளாதார தொகுப்பு நிதியையும் அறிவித்தார். இந்த சிறப்பு நிதியானது, கோவிட் -19 பிரச்னையின் தொடக்கத்தில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவுகள் ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிதி ரூ.20 லட்சம் கோடியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு நிகரானது என்றார். அவர் மேலும் கூறுகையில், ஆத்மாநிர்பார் பாரத்  கொள்கையை அடைவதில் இந்த  நிதி தற்போதைய மிக முக்கிய தேவையான ஊக்கத்தை தருவதாக அமையும் என்றார்.

இந்த தொகுப்பு நிதியில், நிலம், தொழிலாளர், பணப்புழக்கம் மற்றும் சட்டங்களும் கவனத்தில் கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், குடிசைத் தொழில், சிறு, குறு,  நடுத்தர, தொழில்கள், தொழிலாளர்கள், நடுத்தட்டு மக்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இதில் கவனத்தில் கொள்ளப்படுவார்கள். இந்த தொகுப்பு நிதி குறித்த விரிவான  அறிவிப்புகள், மத்திய நிதியமைச்சரால் நாளை அல்லது வரும் சில நாட்களில் வெளியிடப்படும் என்றார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட ஜேஏஎம் டிரினிடி உள்ளிட்ட பிற நேர்மறையான பொருளாதார தாக்கங்கள் குறித்து பேசிய பிரதமர், நாடு சுயசார்பு அடைய பல உறுதியான நடவடிக்கைகள் தேவை என்றார். அப்போதுதான் கோவிட் 19 போன்ற  பிரச்சினைகளின் தாக்கத்தின்போது, வருங்காலத்தில் மீண்டு வர முடியும். இந்த சீர்திருத்தங்களில், குறிப்பாக விவசாயத்திற்கான விநியோக சங்கிலித் தொடர் சீர்திருத்தங்கள், விகிதாச்சார வரி முறை, எளிய மற்றும் தெளிவான சட்டம், திறமையான மனிதவளம், வலுவான நிதி அமைப்பு ஆகியவை அவசியம். இந்த சீர்திருத்தங்கள் வர்த்தகத்தை ஊக்குவிக்கும், முதலீடுகளை வரவேற்கும்  மேலும்,  மேக் இன் இந்தியா திட்டத்தை மேலும் வலுப்படுத்தும்.

உலக அளவில் விநியோகச் சங்கிலித் தொடரில் உள்ள கடுமையான போட்டியை சமாளிக்க,  சுயசார்பு நாட்டை தயார்படுத்தும் என்றும், இந்த போட்டியில் நாடு வெற்றி பெறுவது இதுதான் முக்கியம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இதை கவனத்தில் கொண்டுதான் இந்த தொகுப்பு நிதி திட்டம் தயாரிக்கப்பட்டது என்றார். இது பல்வேறு துறைகளில் செயல்திறனை அதிகரிப்பதுடன், தரத்தையும் உறுதி செய்யும் எனவும் குறிப்பிட்டார்.

நாட்டிற்கான இத்திட்டத்தின் பங்களிப்பு குறித்து குறிப்பிட்ட பிரதமர், இந்த தொகுப்பு நிதி ஏழைகள், ஏழைகள், தொழிலாளர்கள், புலம்பெயர்ந்தோர் உள்ளிட்ட அமைப்புசார்ந்த மற்றும் அமைப்புசாரா துறைகளை சேர்ந்தவர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்றார்.

இந்த பிரச்னையானது நமக்கு உள்ளூர் உற்பத்தி, உள்ளூர் சந்தை மற்றும் உள்ளூர் விநியோகச் சங்கிலிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி உள்ளது என்பதை பிரதமர் குறிப்பிட்டார். இந்த நெருக்கடியான நேரத்தில், நமது அனைத்து தேவைகளும் உள்ளூரில்தான்  நிறைவேறின. இப்போது, உள்ளூர் தயாரிப்புகளைப் பற்றி குரல் கொடுக்கவும்,  அவற்றை உலகளாவியதாக மாற்றவும் செய்ய வேண்டிய நேரம் இது என்றும் பிரதமர் கூறினார்.

 

கொரோனாவுடன் வாழ்தல்

 

பல்வேறு நிபுணர்களும், அறிவியலாளர்களும், வைரஸ் நீண்டக்காலமாக நம் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கப்போகிறது என்று கூறியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். ஆனால், நம் வாழ்க்கை வெறுமனே அதைச்சுற்றி மட்டும் அமைந்துவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்துவதும் முக்கியம் என்றும் அவர் கூறினார். மக்கள் தங்கள் இலக்குகளை நோக்கி பயணிக்கும் அதே நேரத்தில், முகக்கவசம் அணிவது, இரண்டடி இடைவெளியை பராமரிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

நான்காவது கட்ட ஊரடங்கு, இதுவரையில் இல்லாத அளவிற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று அவர் கூறினார். மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், புதிய விதிகள் வகுக்கப்படும், மேலும் இது குறித்த தகவல்கள் மே 18ம் தேதிக்கு முன்னர் தெரிவிக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.


(Release ID: 1623614) Visitor Counter : 1057