பிரதமர் அலுவலகம்

சர்வதேச செவிலியர் தினத்தன்று செவிலியர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

प्रविष्टि तिथि: 12 MAY 2020 5:05PM by PIB Chennai

சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு பிரதமர், திரு. நரேந்திர மோடி செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்தார் .

 

"நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு இருபத்தி நான்கு மணி நேரமும் உழைக்கும் தனிச் சிறப்புடைய செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சிறப்பு வாய்ந்த தினம் சர்வதேச செவிலியர் தினமாகும். தற்சமயம், கொவிட்-19 தோற்கடிக்க அவர்கள் சிறப்பான பணிகளைச் செய்து வருகிறார்கள். செவிலியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நாம் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

 

ப்ளோரென்ஸ் நைட்டிங்கேலால் உந்தப்பட்டு, கடினமாக உழைக்கும், அளவுக்கதிகமான இரக்கத்தின் இருப்பிடமாக நமது செவிலியர்கள் உள்ளனர். செவிலியர்களின் நலனுக்குத் தொடர்ந்து உழைக்கவும், சுகாதாரப் பராமரிப்பை அளிப்பவர்கள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்யும் வண்ணமும் இந்தத் துறையில் வாய்ப்புகளை உருவாக்க கூடுதல் கவனம் செலுத்துவதற்கும் இன்று நாம் மீண்டும் உறுதி ஏற்போம்," என்று பிரதமர் கூறினார்.

***
 


(रिलीज़ आईडी: 1623316) आगंतुक पटल : 250
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Manipuri , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam