ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

கோவிட்-19 பொது முடக்கத்தால் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவியிருந்த போதிலும், NFL , ஏப்ரல் 2020 மாதத்திற்கான உர விற்பனையில் 71 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது

Posted On: 10 MAY 2020 2:59PM by PIB Chennai

மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான தேசிய உர நிறுவனம் NFL ஏப்ரல் 2020 மாதத்திற்கான உர விற்பனையில் 71 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது. கோவிட்-19 நோய் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதைடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் நிலவியிருந்தபோதிலும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 3.62 லட்சம் மெட்ரிக் டன் உரம் விற்பனை செய்யப்பட்டது சென்ற ஆண்டு இதே காலத்தில் 2.12 லட்சம் மெட்ரிக் டன் உரம் விற்பனை செய்யப்பட்டிருந்தது.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/WhatsAppImage2020-05-10at2.50.25PMAR55.jpeg

.

 

பொது முடக்கம் காரணமாக போக்குவரத்துத் தடைகள் பல இருந்தபோதிலும், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக, இந்நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. NFL நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குரான திரு. மனோஜ் மிஸ்ரா ஏப்ரல் 2020 மாதத்தில் இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு மிக அதிக அளவிலான விற்பனை செய்து சாதித்த விற்பனை குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்தார்

 

NFL பஞ்சாபில் நாங்கல், பட்டிண்டா; ஹரியானாவில் பானிபட்; மத்தியப்பிரதேசத்தில் விஜய்பூரில் இரண்டு ஆலைகள் என, தனது ஐந்து ஆலைகளில் உரம் தயாரிக்கிறது.

நிறுவனத்தின் யூரியாவுக்கான உற்பத்தித்திறன் 35.6 8 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ள போதிலும் 2019- 20ஆம் ஆண்டு காலத்தில் மிக அதிகபட்சமாக 57 லட்சம் மெட்ரிக் டன் உரத்தை நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக விற்பனை செய்துள்ளது. நாட்டிலுள்ள விவசாயப் பெருமக்களுக்கு அரசு அளித்துள்ள உறுதியைப் பூர்த்தி செய்வதற்காக இந்த அனைத்து ஆலைகளிலும் பல்வேறு சமயங்களில் உச்சபட்ச செயல்பாடுகள் நடைபெறுவது நிறுவனத்தின் வெற்றிக் கதையாகும்.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/WhatsAppImage2020-05-10at2.50.55PMHOM0.jpeg

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/WhatsAppImage2020-05-10at2.50.56PM0TJE.jpeg

இதுதவிர கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்திற்காக, அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பணியாளர்கள் தங்களது ஒரு நாள் ஊதியமா88 லட்சம் ரூபாயை பிரதமரின் PM CARES நிதியத்திற்கு வழங்கினர். இது தவிர, நிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் (CSR) திட்டத்தின் கீழ் PM CARES  நிதியத்திற்கு இதே நோக்கத்திற்காக இந்நிறுவனம் 23.94 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. இதையடுத்து இந்த நிறுவனம் PM CARES நிதியத்திற்கு மொத்தம் 1.52 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

***

 

RCJ/RKM



(Release ID: 1622710) Visitor Counter : 187